Sunday, May 12
Shadow

தீராக்காதல் – திரைவிமர்சனம் (மனதை வருடும் மயில் தோகை) Rank 4/5

காதலர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் காதல் தோல்வி அடைந்து இருவருக்கும் வெவ்வேறு
.திருமணம் நடந்து அவர்கள் மீண்டும் சந்திக்கும் போது ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து எடுத்திருக்கும் படம் தான் தீராக் காதல்

இந்தப் படத்தில் நாயகனாக ஜெய் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சிவதா நடித்துள்ளார் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அம்ஜத் அப்துல் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் இந்த படத்தின் இயக்குனர் ரோகன் வெங்கடேஷ் இவர் ஏற்கனவே அதே கண்கள் பெட்ரமாக்ஸ் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் இந்தப் படத்தையும் மனதை வருடும் படமாக கொடுத்திருக்கிறார் என்று சொன்னால் மிக ஆகாது காதல் என்ற மூன்று வார்த்தையை பல கோணங்களில் காண்பித்து இருக்கிறார்கள் ஆனால் இது ஒரு புதிய கோணம் என்றும் சொல்லலாம் காதல் ஒருபோதும் பிரிவதில்லை காதலர்கள் தான் எப்போதும் பிரிகிறார்கள் என்பதை மிக அழகாக கவிதையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் மோகன் வெங்கடேஷ் படத்தை மிகவும் கூர்ந்து ஒவ்வொரு காட்சியும் மிகவும் கூர்ந்து செய்திருக்கிறார் என்று சொன்னால் சொல்லலாம் ஒவ்வொரு காட்சியின் வசனங்களும் அதே போல் மிக அழகான அற்புதமான வசனங்களை கொடுத்திருக்கிறார்கள்.

சரி படத்தின் கதையை பார்ப்போம் ஜெய் ஸ்வேதா கணவன் மனைவி இவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தை அலுவலக விஷயமாக மங்களூர் செல்கிறார் அவர் செல்லும் அதே ரயிலில் அவரின் முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராஜேஷ் வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் சந்தித்தவுடன் இவர்களுடைய மலரும் நினைவுகள் மனதில் ஓடுகிறது இருவரும் பழகுகிறார்கள் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை இந்த படத்தின் திரைக்கதையாக அமைத்திருக்கிறார் இயக்குனர். ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜெய் காதல் என்ன ஆனது சிவதா ஜெய் கணவன் மனைவி உறவு என்னானது இதற்கான விடை தான் இந்த தீராக் காதல்

நடிகர் ஜெய் தீராக் காதல் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் ஏன் இந்த கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார் என்று கூட சொல்லலாம் இயக்குனர் எண்ணத்தையும் கதையின் களத்தையும் புரிந்து கொண்டு மிக அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் படத்திற்கு படம் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை பெருமளவில் கலந்து வருகிறார் இதற்கு முன் என்ற படங்களில் எல்லாம் கொஞ்சம் சீரியசான கதாபாத்திரங்களாக தான் நடித்திருந்தார் ஆனால் இதில் முழுக்க முழுக்க இளமை தழும்ப அழகான ஒரு காதல் கதையில் ஒரு ஒரு காதலியின் நடிப்பை மிக அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்

ஜெய் மனைவியாக வரும் சிவதா இவருக்கு நடிப்பு சொல்லியா கொடுக்க வேண்டும் இதற்கு இன்னும் இதற்கு முன் நடித்த எல்லா படத்திலும் தன் திறமையை மிகப் பெரிய அளவில் வெளிப்படுத்தியவர் இந்த படத்திலும் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்திருக்கிறார் கணவனுடன் இணைந்து இருக்கும் போது அருமையான ஒரு காதலியும் அதேபோல் ஜெயுடன் ஏற்படும் மோதல் மோதல் நேரத்தில் வித்தியாசமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

படத்திற்கு இன்னொரு பலம் என்று சொன்னால் அது இசையமைப்பாளர் சித்திக்குமார் பின்னணி இசைகளும் சரி பாடல்களும் சரி மிக அற்புதமாக கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் அதேபோல் படத்திற்கு இன்னொரு பலம் ரவி ஒளிப்பதிவாளர் என்று சொல்ல வேண்டும் அற்புதமான காட்சிகளை கொடுத்து நம் கண்களை கவர்கிறார் ஒளிப்பதிவாளர்

இந்த படத்தின் மிக முக்கிய பலம் என்று சொன்னால் ஜெய் ஸ்ரீ சிவதா ஜோடியின் மகளாக நடித்திருக்கும் வ் விருத்தி அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் இந்த குழந்தை மலையாள அவர்கள் மிகச்சிறந்த நடிகை பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார் இந்த படத்திற்கும் இந்த படத்தின் கதைக்கும் மிகப்பெரிய பலமாக இயக்குனருக்கு இருந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்..

மொத்தத்தில் தீராக்காதல் மனதை வருடும் காதல் கீதம்