சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவா, சோனியா அகர்வால், அப்பாஸ் மற்றும் மாளவிகா நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய படம் ‘திருட்டுப்பயலே’. இப்படம் வர்த்தக ரீதியாகவும் வெற்றிபெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக சுசி கணேசன் அறிவித்திருந்தார்.
முதல் பாகத்தில் ஜீவன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹாவும், அப்பாஸ் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடிக்கவிருப்பதாகவும் கூறியிருந்தார். முதல்பாகத்தில் மாளவிகாவின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்ட நிலையில், அந்த கதாபாத்திரத்தில் எந்த நடிகையை நடிக்க வைக்கலாம் என்பது குறித்து சுசி கணேசன் நீண்ட ஆலோசனையில் இருந்தார்.
இந்நிலையில், மாளவிகா கதாபாத்திரத்தில் அமலாபால் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமலாபால் வசம் தற்போது ‘வடசென்னை’ என்ற ஒரு படம் மட்டுமே கைவசம் உள்ளது. இந்நிலையில், வருகிற வாய்ப்பை உதறவேண்டாம் என்ற நிலையில், இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார் என்று கூறப்படுகிறது. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.