Monday, May 20
Shadow

நோ கட்ஸ் நோ க்ளோரி “துணிவு” – திரைவிமர்சனம் மாஸ் பொங்கல் ( Rank 4.5/5)

எச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் துணிவு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கடந்த முறை வலிமை திரைப்படத்தில் சற்று சறுக்கியதால் இம்முறை பந்தயம் அடித்தே தீர வேண்டும் என்ற உறுதியுடன் களமிறங்கியுள்ளார் எச்.வினோத்.

கதைப்படி சென்னையின் முக்கிய சாலையில் உள்ள ஒரு வங்கியில் உள்ள ரூ.500 கோடியை உதவி கமிஷனரும் சிலரும் சேர்ந்து கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் அதே வங்கியில் சர்வதேச கேங்ஸ்டரான அஜித் அந்த கொள்ளையர்களையும் பிடித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறார். அஜித்தை பிடிக்க கமிஷனர் சமுத்திரக்கனி தலைமையிலான குழு அமைக்கப்படுகிறது. அவர்கள் அஜித்துடன்‌ பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். உண்மையில் ஏன்‌ அஜித் அந்த வங்கியில் கொள்ளையடிக்க வருகிறார்? அஜித்துக்கும் அந்த வங்கிக்கும் என்ன சம்பந்தம்? இறுதியில் யார் கொள்ளையர்கள் என்பதுதான் துணிவு படத்தின்‌கதை. அஜித்தை நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு எனர்ஜியாக பார்ப்பதில் ரசிகர்களுக்கு செம ஹேப்பி. முதல் பாதி முழுவதும் அத்தனை எனர்ஜியுடன் மனிதன் வலம் வருகிறார். இதுபோன்ற மாஸ் கமர்ஷியல் படத்தில் வங்கிகள் செய்யும் பித்தலாட்டங்களையும் தோலுரித்து காட்டியுள்ளார் இயக்குனர். உங்க வங்கியில் ரூ.1000 கடன் வாங்குன அடிப்பீங்க கோடியில் கடன் வாங்குனா வணக்கம் போடுவீங்கள்ல என்று அஜித் கேட்கும் போது கைதட்டலில் அரங்கம் அதிர்கிறது. சாதாரண மக்கள் தினசரி வாழ்க்கையில் வங்கிகளால் கிரிடிட் கார்டு, மியூட்சுவல் பன்ட் என்று ஏமாற்றப்படுவதை இயக்குனர் எச்.வினோத் அருமையாக சொல்லியுள்ளார். இரண்டாம் பாதியில் வரும் அஜித் ஏன் இதனை எல்லாம் செய்கிறார் என்பதற்கான காரணம் நம்பும்படி உள்ளது. மஞ்சு வாரியருக்கு நாயகனுக்கு இணையான வேடம். அசத்தியுள்ளார். சமுத்திரக்கனி, வில்லன் ஜான் கொக்கேன், பக்ஸ், மகாநதி சங்கர் உள்ளிட்டோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளனர். ஜிப்ரானின் பின்னணி இசை மிரட்டல். அஜித்தை ரசித்து ரசித்து பின்னணி இசை அமைத்துள்ளார். வில்லன் டா என்று அஜித் சொல்லும்போது புல்லரிக்கிறது. படம்‌‌ முழுவதும் அஜித்தின் ஒன் மேன் ஷோ பளிச்சிடுகிறது. அஜித்தை எப்படி காட்டினால் அவரது ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதை உணர்ந்து காட்சிகள் வைத்துள்ளார் எச்.வினோத். இதை கண்டுபிடிக்க இவருக்கு மூன்று படங்கள் தேவைப்படுகிறது. சிறுத்தை சிவாகிட்ட கத்துக்கோங்கப்பா. மொத்தத்தில் இந்த பொங்கல் அஜித் ரசிகர்களுக்கு “தல” பொங்கல் தான்.

மொத்தத்தில் துணிவு தான் பொங்கல் ட்ரீட் அஜித் ரசிகர்களுக்கு  மிக பெரிய பொங்கல் இது தான் உண்மையான தலை பொங்கல்