Thursday, April 30
Shadow

“TN 2026” – சிரிப்பிலும் சிந்தனையிலும் சுடரும் அரசியல் கமர்ஷியல்! ஏப்ரல் 10 உலகம் முழுவதும் ரிலீஸ்

“TN 2026” – சிரிப்பிலும் சிந்தனையிலும் சுடரும் அரசியல் கமர்ஷியல்! ஏப்ரல் 10 உலகம் முழுவதும் ரிலீஸ்

அரசியலை சிரிப்போடு சொல்லியும், சமூக உணர்வை சுவாரஸ்யமாக பரப்பியும், பார்வையாளர்களை கவரும் வகையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “TN 2026”. கலகலப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் ஜானரில் உருவான இப்படம், வரும் ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

KRG Kannan Ravi Group தயாரிப்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, இயக்குநர் உமாபதி ராமையா திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். தம்பி ராமையா எழுதிய கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், அரசியல் பகடிக்கும் சமூக கருத்துக்கும் இடையே சமநிலை கொண்டு வந்திருக்கிறது.

சமீபத்தில் வெளியான போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேடையின் நடுவில் நட்டி நட்ராஜ் கையை உயர்த்தி நிற்க, அவரைச் சுற்றி கோஷமிடும் கூட்டம், கொடிகள், சாடும் வாசகங்களுடன் காட்சியளிப்பது — படம் ஒரு சிரிப்பு விருந்து மட்டுமல்ல, ஒரு அரசியல் பிரதிபலிப்பும் ஆக இருக்கும் என்பதைக் குறிப்பதாக இருக்கிறது.

நட்டி நட்ராஜ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா ஆகியோரின் இணைப்பு முதல் முறையாக இந்தப் படத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

இதனுடன் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பிக்பாஸ் முத்துக்குமரன், ஆதித்யா கதிர், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், வையாபுரி, வடிவுக்கரசி, விஜி சந்திரசேகர், ஸ்ரீஜா ரவி, இந்திரஜா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் சாண்டியும் இணைந்துள்ளார்.

இசையை தர்புகா சிவா அமைத்துள்ள இப்படத்திற்கு, பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங்கை அரள் R. தங்கம் கவனித்துள்ளார். NK ராகுல் கலை இயக்கம், மகேஷ் மேத்யூ ஸ்டண்ட், சாண்டி மற்றும் பிரவீன் நடன அமைப்பை மேற்கொண்டுள்ளனர்.

படப்பிடிப்பு மற்றும் பிற பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், “TN 2026” ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக மட்டுமல்லாமல், தற்போதைய அரசியல் சூழ்நிலையை நகைச்சுவை வழியாக சுட்டிக்காட்டும் படைப்பாகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“TN 2026” – A Political Commercial Entertainer Blending Humor and Thought, Releasing Worldwide on April 10

The upcoming film “TN 2026” is set to entertain audiences with a perfect mix of political satire, humor, and socially relevant themes. Positioned as a lively political comedy commercial film, it is all set for a worldwide theatrical release on April 10, as officially announced by the makers.

Produced by Kannan Ravi and Deepak Ravi under the banner of KRG Kannan Ravi Group, the film is written and directed by Umabathi Ramaiah, based on a story by Thambi Ramaiah. The film promises a fine balance between political parody and meaningful social commentary.

The recently released poster has already created a buzz among fans. It features Natti Natraj standing at the center of a stage with his hand raised, surrounded by a cheering crowd, flags, and satirical banners—hinting that the film will not just entertain but also reflect political realities in an engaging manner.

Natti Natraj plays the lead role, alongside female leads Sriteja Rao, Chandini Tamilarasan, and Yashika Aannand. Notably, M.S. Bhaskar, Ilavarasu, and Thambi Ramaiah come together for the first time in this film.

The film also features a strong supporting cast including Redin Kingsley, Lollu Sabha Maaran, Bigg Boss Muthukumar, Adithya Kathir, Chitra Lakshmanan, Thalaivasal Vijay, Vaiyapuri, Vadivukkarasi, Viji Chandrasekhar, Sreeja Ravi, Indraja, and Robo Shankar in key roles. Sandy makes a special cameo appearance.

On the technical front, the film’s music is composed by Darbuka Siva, with cinematography by P.G. Muthiah and editing by Arul R. Thangam. Art direction is handled by NK Rahul, stunts by Mahesh Mathew, and choreography by Sandy and Praveen.

With all production work completed, “TN 2026” is expected to be a complete entertainer that not only delivers laughter but also cleverly reflects contemporary political scenarios through satire.