Friday, April 17
Shadow

சாக்க்ஷி மற்றும் மதுமிதாவை குறிவைக்கும் லாஸ்லியா இன்று பதட்டத்தில் பிக் பாஸ் வீடு

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்களன்று ரகசியமாக கன்ஃபக்சன் அறையில் போட்டியாளர்கள் இருவரை நாமினேஷன் செய்வது வழக்கம். இந்த நாமினேஷன் ரகசியமாக நடைபெறுவதால் யார் யாரை நாமினேஷன் செய்தது என்பது தெரியாது. பலசமயம் நெருக்கமானவர்களே கூட நாமினேஷன் செய்ததுண்டு

இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் முதல்முறையாக ஒப்பன் நாமினேஷன் நடைபெறுகிறது. இதனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். ஒவ்வொரு வாரமும் ஆப்பு அதிகரித்து கொண்டே போவதாக அபிராமி புலம்புகிறார்.

இந்த நிலையில் முதல் நபராக நாமினேஷன் செய்ய வரும் லாஸ்லியா, மதுமிதாவை நாமினேஷன் செய்கின்றார். சாண்டி பிரச்சனையில் அவர் ஏற்கனவே மன்னிப்பு கேட்ட பின்னரும் அந்த பிரச்சனையை மிண்டும் கிளப்புவதை தான் விரும்பவில்லை என்று நாமினேஷனுக்கான காரணத்தை கூறுகின்றனர்.அடுத்து அவர் நேரடியாக சாக்சியை நாமினேஷன் செய்வதாக கூறுகிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம் சாக்க்ஷியை கொஞ்சம் தடுமாறவைக்கிறது

மற்ற போட்டியாளர்கள் யார் யாரை நாமினேஷன் செய்கின்றனர், அதற்கு அவர்கள் கூறும் காரணம் என்ன? என்பதை இரவு வரை பொறுத்திருந்து பார்ப்போம்