காக்கா முட்டை, குற்றமே தண்டனை என அடுத்தடுத்த வாழ்க்கையின் யதார்த்தங்களைச் சொல்லும் படங்களைத் தரும் இயக்குநர் மணிகண்டனின் அடுத்த படம் தான் ‘ஆண்டவன் கட்டளை
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் முதல் முறையாக நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு ரசிகர்களிடம் மிகவும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது காரணம் விஜய்சேதுபதி படம் என்றாலே காமெடி மட்டும் இல்லாமல் சென்டிமென்ட் நல்ல கதை இப்படி எல்லா அம்சமும் நிறைந்து இருக்கும் அது மட்டும் இல்லாமல் இந்த படத்துக்கு மேலும் மணி மகுடம் சேர்க்க இயக்குனர் மணிகண்டன் இந்த படத்தை மிகவும் கமர்ஷியல் கலந்த காமெடி படமாக அமைத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இறுதிசுற்று படத்துக்கு பிறகு ரித்திகா சிங் நடிக்கிறார்.வாழ்கையின் எதற்தையும் பாஸ்போர்ட் மையக்கருத்தை வைத்து வரும் படம் இந்த படம் நாளை வெளியாகிறது கிட்டத்தட்ட 400 திரையரங்குகளில் வெளியாகிறது