Thursday, March 12
Shadow

ஆரி அர்ஜுனன் நடிக்கும் “4த் ஃப்ளோர்” திரைப்பட டிரெய்லர் வெளியீடு – பிப்ரவரி 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு

ஆரி அர்ஜுனன் நடிக்கும் “4த் ஃப்ளோர்” திரைப்பட டிரெய்லர் வெளியீடு – பிப்ரவரி 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு

MANO CREATION நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் A. ராஜா தயாரிப்பில், இயக்குநர் L.R. சுந்தரபாண்டி இயக்கத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடித்துள்ள “4த் ஃப்ளோர்” திரைப்படம் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான விஜய் சேதுபதி, ஆர்யா, பா. ரஞ்சித் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோரால் சமூக வலைத்தளங்கள் வழியாக வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான டிரெய்லர், ஒரு அபார்ட்மெண்டில் நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்களுடன் தொடங்கி, பின்னர் கொலை மற்றும் அதன் விசாரணையை மையமாகக் கொண்ட பரபரப்பான திரில்லர் படமாக மாறுகிறது. கனவு, மர்மம் மற்றும் விசாரணை ஆகிய கூறுகள் இணைந்து புதுமையான திரில்லர் அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் ஆரி அர்ஜுனன், தனது நெடுஞ்சாலை, மாயா, ரெட்டைச் சுழி போன்ற படங்களுக்குப் பிறகு இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மார்கன், மார்க் போன்ற படங்களில் நடித்த தீப்ஷிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பவித்ரா, சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கனவுகளுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையிலான தொடர்பை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ‘தீர்க்கதரிசி’ திரைப்படத்தை இயக்கிய எல்.ஆர். சுந்தரபாண்டி, அதே பரபரப்பான பாணியில் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யூ/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

குடும்பத்துடன் பார்க்க ஏற்ற வகையில், பயமுறுத்தும் காட்சிகளைத் தவிர்த்து, வாழ்க்கையில் பிரச்சனைகள் எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம் என்பதைக் கூறும் கருத்துடன் இப்படம் உருவாகியுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

“போடா போடி” திரைப்படத்தின் இசையமைப்பாளர் தரண் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். “போடா போடி”, “வெண்ணிலா கபடி குழு” படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஜே. லக்ஷ்மன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். அநீதி, ஜெயில் மற்றும் மத்தகம் வெப் சீரிஸ்களில் பணியாற்றிய சுரேஷ் கல்லேரி கலை இயக்கத்தை கவனித்துள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. செவன்த் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் K. கண்ணன் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டை மேற்கொள்கிறார்.
தொழில்நுட்பக் குழு: இயக்கம் – L.R. சுந்தரபாண்டி
தயாரிப்பு – A. ராஜா
நிர்வாக தயாரிப்பு – சூரிய பிரகாஷ் P
ஒளிப்பதிவு – ஜே. லக்ஷ்மன்
இசை – தரண் குமார்
பாடல்கள் – கு. கார்த்திக்
எடிட்டிங் – ராம் சுதர்ஷன்
கலை – சுரேஷ் கல்லேரி
நடனம் – அபு சால்ஸ்
ஸ்டண்ட் – டேஞ்சர் மணி
மக்கள் தொடர்பு – A. ராஜா
டிரெய்லர் லிங்க்:

 

 

Trailer of Ari Arjunan’s “4th Floor” Released – Film Set for Theatrical Release on February 27

Produced by A. Raja under the banner of MANO CREATION and directed by L.R. Sundarapandi, the thriller film “4th Floor”, starring actor Ari Arjunan in the lead role, is scheduled for a worldwide theatrical release on February 27. The trailer of the film was officially launched on social media by prominent Tamil film personalities Vijay Sethupathi, Arya, Pa. Ranjith, and Vijay Antony.

The recently released trailer begins with supernatural incidents occurring inside an apartment, but gradually shifts into an intense thriller focusing on murders and the investigations surrounding them. The story travels through multiple layers including dreams, mystery, and crime investigation, promising a fresh and engaging thriller experience. The trailer has already received a positive response from fans and cinema enthusiasts.

Following his notable performances in films such as Nedunchalai, Maya, and Rettai Suzhi, actor Ari Arjunan plays a significant role in this film. Actress Deepshika, known for her roles in Morgan and Mark, plays the female lead. The film also features Pavithra, Subramania Siva, and Thalaivasal Vijay in important supporting roles. The story is said to explore the connection between dreams and real life. Director L.R. Sundarapandi, who earlier directed the thriller Theerkkatharisi, appears to have maintained the same pace and intensity in this film as well. The movie has received a U/A certification from the censor board.

The director has stated that the film is designed as a family-friendly thriller without disturbing visuals and conveys the message that problems can arise from anywhere and one must remain cautious in life.

Music for the film is composed by Dharan Kumar, known for his work in Poda Podi. Cinematography is handled by J. Lakshman, who previously worked on Poda Podi and Vennila Kabadi Kuzhu. Art direction is done by Suresh Kalleri, who has worked on projects such as Aneethi, Jail, and the Mathagam web series.

The film is currently in its final stages of production. K. Kannan of Seventh Studio is handling the Tamil Nadu theatrical distribution.
Technical Crew: Director – L.R. Sundarapandi
Producer – A. Raja
Executive Producer – Sooriya Prakash P
Cinematography – J. Lakshman
Music – Dharan Kumar
Lyrics – Ku. Karthik
Editing – Ram Sudarshan
Art Director – Suresh Kalleri
Choreography – Abu Salis
Stunts – Danger Mani
Public Relations – A. Raja
Trailer Link: https://youtu.be/atMfYxlRH3U