Wednesday, May 6
Shadow

சூரியகிரண் இயக்கத்தில் வழக்கறிஞராக வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் “அரசி” புதிய படம் ஆரம்பம்

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் “அரசி” எனும் புதிய படம் துவக்கவிழாவுடன் டப்பிடிப்பு துவங்கியது .சூரிய கிரண் இயக்கத்தில் ரசி மீடியா மேக்கர்ஸ்,வி.வி பிலிம்ஸ் சார்பில் ஏ.ஆர்.கே.ராஜராஜா ஆவடி சே.வரலட்சுமி தயாரிக்கிறார்கள்.

வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக்ராஜு சித்தார்த்ராய், சந்தானபாரதி, சாப்ளின் பாலு, அந்தோணி தாஸ், கலக்கப்போவது யாரு சிவா, ஹரி ஆகியோர் நடிக்கின்றனர்.செல்வா R. ஒளிப்பதிவு செய்ய விபின் சித்தார்த் இசையமைக்கிறார்.

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் அரசி படத்தை கல்விக்கோ ,அய்யா வேந்தர் திரு.G.விஸ்வநாதன் அவர்கள் பொற்கரங்களால் துவங்கி வைக்க வி ஐ டி நிறுவவனங்களின் துணைத்தலைவர் “இளையவேந்தர்” திரு.சங்கர் விஸ்வநாதன் அவர்கள் கிளாப் அடித்து படப்பிடிப்பு தொடங்கி வைத்தார்.அரசி திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வி ஐ டி வளாகத்தில் நடைபெறுகிறது.

படப்பிடிப்பை மேற்பார்வையிட்டு வேந்தர் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.சங்கர் விஸ்வநாதன் அவர்கள் படப்பிடிப்புக்கான ஒத்துழைப்பு கொடுத்து உதவியதோடு படப்பிடிப்பு குழுவினர் அனைவரையும் வாழ்த்தினார்.
இதன் படப்பிடிப்பு சென்னை அருகில் கேளம்பாக்கம், வண்டலூர் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த விழாவில் கதாநாயகன் கார்த்திக் ராஜு, மனிஷா, சித்தார்த்ராய்,சந்தான பாரதி,அங்கனா ராய்,மீரா இசையமைப்பாளர் சித்தார்த்விபின்,ஆல் இண்டியா பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாக இயக்குநர் கல்யாண சக்கரவர்த்தி, கலை இயக்குனர் ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.