
ஜோதிட ஆலோசனைக்கு Mobile No.9789013486
Email:[email protected]
ஆங்கில தேதி • 28.11.2017
கிழமை • செவ்வாய்க்கிழமை
நட்சத்திரம் • பூரட்டாதி 5.21 PM
யோகம் • வஜ்ரா
கரணம் • கௌலவ/சைதுளை
ராகுகாலம் • 2.46 PM to 4.11 PM
எமகண்டம் • 9.07 AM to 10.32 AM
குளிகை • 11.56 AM to 1.21 PM
திதி • நவமி 11.24 PM
இன்றைய நட்சத்திர பலன்கள்.
அஸ்வினி • ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் விளங்கக்கூடிய சிறப்பான நாள். உற்சாகம் துள்ளி குதித்து ஆடும்.
பரணி • நினைத்த காரியங்களில் சிறு தடைகள் இருந்தாலும் இது நல்ல நாளே. தடைகளை தகர்த்தெறிந்து வெற்றி நடைபோடும் இனிய நாள்.
கிருத்திகை • தடைகளை தகர்த்தெறிந்து வெற்றி நடைபோடும் இனிய நாள். காலதாமதமான காரியங்கள் வெற்றிபெற வாய்ப்புண்டு.
ரோகிணி • சிறப்பான நாளாக இருந்தபோதும் அதிகாரிகளிடத்தில் கவனமாக இருந்தால் நல்லதே நடக்கும். அமைதியே சிறப்பு.
மிருகசீரிடம் • உடலும் உள்ளமும் பூரிக்ககூடிய இனிமையான நிகழ்வுகள் நடக்கக்கூடிய இனிமையான நாள். இறை வழிபாடு மேன்மை அளிக்கும்.
திருவாதிரை • கணவன் மனைவி மற்றும் காதலன் காதலியிடையே அன்புபெருகும் மகிழ்ச்சியான நாள். காதலை வெளிப்படுத்தவும் வெற்றிதான். உங்களுக்கு உரிய மரியாதையும் கௌரவமும் கிடைக்கக்கூடிய சிறப்பான நாள்.
புனர்பூசம் • மிகவும் இனிமையான நாள். அனைத்து காரியங்களும் தங்கு தடையின்றி நடக்கும்.தனவரவு ஏற்படப்போகும் லாபகரமான நாள்.
பூசம் • தனவரவு ஏற்படபோகும் லாபகரமான நாள். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்..
ஆயில்யம் • வாகனங்களில் செல்லும்போது அதிக கவனம் தேவை. பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கி இருத்தல் நலம்.
மகம் • சுறுசுறுப்பான நாள். மிகுந்த உற்சாகத்துடன் அனைத்து செய்து முடிக்கலாம். தேக ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.
பூரம் • சிறப்பான நாள் என்றாலும் செய்யும் காரியங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிரச்சினைகளை தவிர்த்தல் நல்லது.
உத்திரம் • இன்று வெற்றி திருநாள். அனைத்து விஷயங்களும் லாபகரமாகவும் திருப்தியாகவும் நடக்கும்.
அஸ்தம் • தொழிலில் அதிக கவனம் தேவை. மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆட்படாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சித்திரை • இந்த நாள் இனிய நாள். நினைத்தவை அப்படியே நடக்கும்இது உங்களுடைய நாள். கோயிலுக்கு சென்று வருதல் நன்மை பயக்கும்.
சுவாதி • இந்த நாள் உன்னதமான நாள். மனது உவகை கொள்ளும் வகையில் எல்லாம் இன்று உங்கள் இஷ்டப்படியே நடக்கும். சுப நிகழ்ச்சிகள்பற்றிய பேச்சை துவக்கலாம்.
விஷாகம் • உங்களுக்கு உரிய மரியாதையும் கௌரவமும் கிடைக்கக்கூடிய சிறப்பான நாள்.
அனுஷம் • இன்று உங்கள் காட்டில் மழை. பொருளும் பணமும் தாராளமாக புழங்கும் நாள்.
கேட்டை • நல்ல நாள் என்ற போதிலும் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். இரும்பு உபகரணங்கள் மீதும் கவனம் அவசியம்.
மூலம் • உடல் உபத்திரங்கள் தீர்ந்து ஆரோக்கியமாக விளங்க கூடிய நாள். மனது உற்சாகத்துடன் இருக்கும்.
பூராடம் • சிறப்பான நாள் என்ற போதிலும் செய்யும் காரியங்களில் கவனமுடனும் சிரத்தையுடனும் இருக்க வேண்டும். பிரச்சினைகளை தவிர்த்தல் நலம்.
உத்திராடம் • அருமையான நாள், எல்லா காரியங்களிலும் வெற்றிதான். அப்புறம் என்ன கொண்டாட்டம்தான்.
திருவோணம் • நல்ல நாளாக இருந்த போதும் வீண்வம்பு தேடி வரும் நாள். பேச்சில் கவனம் தேவை.
அவிட்டம் • நினைத்த காரியங்கள் எல்லாம் இனிதே நடக்க இறை வழிபாட்டில் கவனம்செலுத்துங்கள். மகிழ்ச்சிகரமான நாள்.
சதயம் • நண்பர்களுடனும் குடும்பத்தாருடனும் கூடி இன்புறும் மகிழ்ச்சிகரமான நாள். திருமணம் போன்ற சுப விஷயங்களுக்கு அஸ்திவாரம் போடும் நாள்.
பூரட்டாதி • சிறப்பான நாள். மாற்றங்களும் சலசலப்புமின்றி அமைதியாக விளங்கும்.
உத்திரட்டாதி • கொடுக்கல் வாங்கல் மற்றும் பண விஷயங்கள் அனைத்திலும் வெற்றி அளிக்கக்கூடிய நாள்.
ரேவதி • நல்ல நாளாக இருந்த போதும் வாகனங்களில் செல்லும்போதும் இரும்புபொருட்களை உபயோகிக்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும்