Thursday, May 30
Shadow

வீரமே வாகை சூடும் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

விஷால் நடிப்பில் புதுமுக இயக்குனர் சரவணன் இயக்கத்தில் வெளியாகியுள்ள வீரமே வாகை சூடும் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.

ஒரு சாதாரண மனிதன் அசாதாரண சூழ்நிலையை எப்படி கையாண்டு வெற்றிபெறுகிறார் என்பதே இந்த படத்தின் ஒரு வரி கதை. ஒரு அரசியல்வாதிக்கும், சாதாரண மனிதருக்கும் இடையே நடக்கும் போராட்டங்களே வீரே வாகை சுடும் படத்தின் கதை. மிகவும் சிம்பிள் ஆனா கதையை தனது திரைக்கதை மூலம் சூப்பராக எடுக்க முயற்சிசெய்துள்ளார் இயக்குனர் சரவணன். அந்த முயற்சியில் அவர் வென்றாரா என்பதை பார்க்கலாம்.

ஒரு திரில்லர் படத்திற்கு மிக முக்கியமான ஒன்று திரைக்கதை. அதை இயக்குனர் சரவணன் இப்படத்தில் நன்றாக கையாண்டிருக்கிறார். படத்தில் விஷாலுக்கும் அரசியல் வாதிக்கும் இடையே நடக்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

படத்தின் பிளஸ்:
திரைக்கதை, யுவன் சங்கர் ராஜா இசை, யோகிபாபு காமடி

படத்தின் மைன்ஸ்:
முதல் பாதியில் வரும் வசனங்கள்,

மொத்தத்தில் வீரமே வாகை சூடும் படத்தை ஒருமுறை பார்க்கலாம்.