Sunday, May 19
Shadow

வீரபாண்டியபுரம் திரை விமர்சனம் (ரேட்டிங் 2.5/5)

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய், நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில் வெளியாகியுள்ள வீரபாண்டியபுரம் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.

திண்டுக்கல் மாவட்டம் வீரபாண்டியபுரம் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த நாயகி மீனாட்சி இவருக்கும் ஜெயிக்கும் காதல் ஏற்படுகிறது. இந்த காதல் பெற்றோர்கள் சம்மதமில்லாமல் திருமணம் வரை செல்கிறது. தாலிகட்டும் கடைசி நேரத்தில் மனம் மாறுகிறார் ஜெய். பிறகு ஜெய் மீனாட்சியின் தந்தை சரத்திடம் திருமணத்திற்காக சமரசம் பேசுகிறார்.

இது ஒருபுறம் இருக்க இன்னொரு புறம் நெய்க்காரப்பட்டி தலைவர் ஜெயபிரகாஷ் குடும்பத்திற்கும் சரத் குடும்பத்திற்கும் தீராத பகை இருந்து வருகிறது. இரண்டு குடும்பத்துக்கும் உள்ள பகை என்ன? இதற்கும் ஜெய்க்கும் என்ன சம்பந்தம்? இறுதியில் நின்று போன திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

சிவா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெய் அமைதியான கிராமத்து இளைஞராக நடித்துள்ளார். சண்டை காட்சிகளில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். ஜெய்யின் தோற்றம் சுப்ரமணியபுரம் திரைப்படத்தை நியாபகப்படுத்துகிறது. நாயகியாக வரும் மீனாட்சி கோவிந்தராஜ் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் அகன்ஷா சிங் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இரண்டு கதாநாயகிகளுக்கும் சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவை காட்சிகளில் சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார் பாலசரவணன். ஒரு சில காட்சிகள் வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல் இருக்கிறது. ஹரீஷ் உத்தமன், ஜெயபிரகாஷ், காளி வெங்கட் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

படத்தின் பிளஸ்:
ஹரீஷ் உத்தமன், ஜெயபிரகாஷ், காளி வெங்கட் ஆகியோரின் நடிப்பு, பாலசரவணன் நகைச்சுவை, வேல்ராஜ்ஜின் ஒளிப்பதிவு, ஜெய் இசை

படத்தின் மைன்ஸ்:
மெதுவாக செல்லும் திரைக்கதை

மொத்தத்தில் ‘வீரபாண்டியபுரம்’ ஒருமுறை பார்க்கலாம் என்ற ரகமே.