பிரசாந்த் வர்மாவின் ‘ஹனு- மான்’ படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ரீ ராமதூத ஸ்தோத்திரம்’ எனும் நான்காவது பாடல் வெளியீடு
இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஹனு-மான்’ படத்தினை விளம்பரப்படுத்துவதிலும், இப்படம் குறித்து ரசிகர்களிடத்தில் உற்சாகத்தை அதிகரிப்பதிலும் படக்குழுவினர் தொடர்ந்து அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அண்மையில் இப்படத்திற்கான திரையரங்க முன்னோட்டம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘ஹனு-மான்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. தயாரிப்பாளர்கள் இப்படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களை இதுவரை வெளியிட்டுள்ளனர். அவை அனைத்தும் சார்ட் பஸ்டர்களாக மாறியுள்ளன. ஒவ்வொரு பாடலும் வித்தியாசமான வகையில் உருவாகி.. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது ‘ஸ்ரீ ராமதூத ஸ்தோத்திரம்..’ எனும் நான்காவது பாடலை வெளியிட்டுள்ளனர்.
ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்தோத்திரத்தின் பாடல் -இசையமைப்பாளர் கௌரஹரியின் இசை கோர்வையில் உருவாகி இருக்கிறது. இந்தப் பாடலை சாய் சரண் பாஸ்கருணி, லோகேஷ்வர் இடாரா மற்றும் ஹர்ஷவர்தன் சாவேலி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலுடன் வெளியிடப்பட்டிருக்கும் 3D தொழில்நுட்பத்திலான விளக்கக் காட்சி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதனை நாம் திரையில் காட்சிகளுடன் காணும் போது வியப்பில் ஆழ்த்துவது உறுதி. முதல் மூன்று பாடல்களைப் போலவே ‘ஸ்ரீ ராமதூத ஸ்தோத்திரம்..’ எனும் இந்தப் பாடலும் இசை ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களின் மனதையும் கவரும்.
ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி இப்படத்தை பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். ஸ்ரீமதி சைதன்யா இத்திரைப்படத்தை வழங்குகிறார். குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும், அஸ்ரின் ரெட்டி மற்றும் வெங்கட் குமார் ஜெட்டி ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.
தேஜா சஜ்ஜா, அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கலை இயக்க பொறுப்பை ஸ்ரீ நாகேந்திர தாங்கலா ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சின் முதல் திரைப்படம் ‘ஹனு-மான்’. இத்திரைப்படம் ‘அஞ்சனாத்ரி’ எனும் கற்பனையான உலகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கான்செப்ட் உலகளாவியதாக இருப்பதால் இது உலகம் முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் சிறப்பான வரவேற்பை பெறுவதற்கான சாத்திய கூறு உள்ளது.
பிரசாந்த் வர்மாவின் ‘ஹனு-மான்’ திரைப்படம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானிஸ் உள்ளிட்ட உலக மொழிகளிலும், பான்- வேர்ல்ட் திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாகிறது.
Vibe In Harmony To The Thunderous Beats Of Sri Ramadhootha Stotram- The 4th Single From Prasanth Varma’s HANU-MAN is out now
Director Prasanth Varma and team Hanu-Man are leaving no stone unturned in promoting the movie and escalating the excitement. The expectations of the movie starring Teja Sajja reached sky-high after the theatrical trailer received a thumping response. The makers so far released three songs and all of them became chartbusters. Each song is different from the other, in terms of genre, composition, etc. Today, they released the fourth single- Sri Ramadhootha Strotram.
Vibe in harmony to the thunderous beats of Sri Anjaneya Stotram, as the orchestration by Gowrahari is high in energy. The powerful vocals of Sai Charan Bhaskaruni, Lokeshwar Edara, and Harshavardhan Chavali gel with the theme of the song and add an extra layer of ferocity. The 3D presentation of this lyrical video is truly amazing. This one is going to offer goosebumps when we watch with visuals.
Like the first three songs, Sri Ramadhootha Strotram is also going to win hearts.
The movie is produced prestigiously by K Niranjan Reddy of PrimeShow Entertainment, while Smt Chaitanya presents it. Asrin Reddy is the executive producer, Venkat Kumar Jetty is the Line Producer and Kushal Reddy is the associate producer.
The cinematography for this magnum opus is by Shivendra, wherein Srinagendhra Tangala is the production designer.
Amritha Aiyer played the leading lady opposite Teja Sajja, while Varalaxmi Sarathkumar, and Vinay Rai will be seen key roles.
Hanu-Man is the first film from Prasanth Varma’s Cinematic Universe. The film is essentially set-up in an imaginary place called “Anjanadri”. Since the concept of the film is universal, it has the potential to do well across the globe.
HANU-MAN will have a Pan World release in several Indian languages including Telugu, Hindi, Marathi, Tamil, Kannada, Malayalam, English, Spanish, Korean, Chinese and Japanese on January 12, 2024.
Cast: Teja Sajja, Amritha Aiyer, Varalaxmi Sarathkumar, Vinay Rai, Getup Srinu, Satya, Raj Deepak Shetty and others
Technical Crew:
Writer & Director: Prasanth Varma
Producer: K Niranjan Reddy
Banner: Primeshow Entertainment
Presents: Smt Chaitanya
Screenplay: Scriptsville
DOP: Dasaradhi Shivendra
Music Directors: Gowrahari, Anudeep Dev and Krishna Saurabh
Editor: SB Raju Talari
Executive Producer: Asrin Reddy
Line Producer: Venkat Kumar Jetty
Associate Producer: Kushal Reddy
Production Designer: Srinagendhra Tangala
PRO: Yuvraaj
Costume Designer: Lanka Santhoshi