Tuesday, April 22
Shadow

“விஜய்60” படபிடிப்பில் உற்சாகத்தில் விஜய் அக்டோபர் மாதம் முடியும் படபிடிப்பு

தெறி படத்தின் மா பெரும் வெற்றிக்கு பிறகு விஜய் நடிக்கும் படம் விஜய் 6௦ இந்த படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை இப்படத்தின் படபிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது .

விஜய் 6௦ இயக்குனர் பரதன் இயக்க போகிறார் என்ற போது ரசிகர்களிடம் ஒரு அதிருப்தி இருந்தது அதை மீறி விஜய் இந்த படத்தை பரதன் தான் என்பதில் உறுதியாக இருந்தார். காரணம் படத்தின் கதை விஜய் எதிர்பார்பபை விஜய் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் அதிகமா திருப்தியாக விஜய் இருப்பதாக பட குழுவினரிடம் பேச்சு அடிபடுகிறது இந்த படத்தின் படபிடிப்பில் கொஞ்சம் அதிக உற்சாகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துவரும் படம் ‘விஜய் 60′. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் ஆந்திராவில் தொடங்கவுள்ளது.

இப்படத்தில் விஜய் இரண்டு கெட்டப்பில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இதுவரை 70% முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் ஒருபக்கம் படப்பிடிப்பு நடைபெறும் அதே வேளையில் இன்னொரு பக்கம் இப்படத்தின் எடிட்டிங் மற்றும் சில போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் தொடங்கப்பட்டுள்ளதாம். மேலும் அக்டோபர் இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

Leave a Reply