Saturday, March 25
Shadow

பிரபல நடிகருடன் ஜோடி சேரும் ஸ்ரீதிவ்யா

நடிகர் ஜீவா உடன் சங்கிலி புங்கிலி கதவ திற படத்தில் நடித்த நடிகை ஸ்ரீதிவ்யா தற்போது பிரபல நடிகரான விஜய் ஆண்டனியுடன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இயக்குனர் விஜய் மில்டன் இயக்க உள்ள மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளார். இந்த படத்தை இன்பினிட்டி பிலிம் வென்சர் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான ஷூட்டிங் வரும் நவம்பர் மாதம் தொடங்க, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் ஆடுகளம் நரேன் மற்றும் வித்யா பிரதீப் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர்.