Wednesday, April 29
Shadow

விஜய் அரசியல் பிரவேஷம் பற்றி அவர் தான் சொல்லவேண்டும் ஷேபா சந்திரசேகர் என் கணவர் கட்சிக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை !

அதிரடியாக விஜய் அப்பா கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்தார்.இது விஜய் எனக்கு தெரியாமல் என் அப்பா சந்திரசேகர் கட்சி ஆரம்பித்துள்ளார். என்று அறிவித்தார் அதே போல இன்று அவர் அம்மா ஷேபா சந்திரசேகர் எனக்கும் இவர் கட்சி ஆரம்பித்ததுக்கும் எந்த சமந்தம் இல்லை என்று கூறியுள்ளார். இத்ற்கான விளக்கமும் அவர் சொல்லியுளார்.

“அசோசியேஷன் ஒன்று ஆரம்பிக்கிறேன். அதற்கு கையெழுத்து வேண்டும் என்று என் கணவர் என்னிடம் கேட்டார். நல்ல விஷயம்தானே என்று நானும் கையெழுத்துப் போட்டேன். ஒரு வாரத்துக்கு முன்பு இன்னொரு கையெழுத்து வேண்டும் என்று கேட்டார். கட்சிப் பதிவு செய்வதற்கு என்று நான் புரிந்துகொண்டேன்.

விஜய்க்குத் தெரியாமல் நீங்கள் பண்ணுவதால் நான் கையெழுத்துப் போடமாட்டேன் என்று என் கணவரிடன் சொல்லிவிட்டேன். முதலில் போட்டுக் கொடுத்த கையெழுத்தைக் கூட நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறிவிட்டேன்.

இதனால் நான் இப்போது கட்சிக்குப் பொருளாளர் எல்லாம் கிடையாது. எனக்குப் பதிலாக வேறொருவரைப் பொருளாளராகப் போட்டுக் கொள்வதாக என் கணவர் சொல்லிவிட்டார்.

அரசியல் விஷயங்களை எல்லாம் மீடியாவில் பேச வேண்டாம் என்று விஜய் பல தடவை சொல்லியும் என் கணவர் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால் விஜய் இப்போது அவரிடம் பேசுவதில்லை. விஜய் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்”.