Sunday, April 21
Shadow

விஜய்யின் அரசியல் ஆட்டம் ஆரம்பமாகிறது அதற்கான மூவ் ஸ்டார்ட்

விஜய் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் பல கோடி ரசிகர்கள் உலகம் முழுதும் விஜய் ரசிகர்கள் என்று சொல்ல்வதைவிட வெறியர்கள் என்று தான் சொல்லணும் அந்த அளவுக்கு விஜய் மேல் பக்தி சினிமாவில் முதல் இடத்தை பிடித்த விஜய்க்கு அடுத்த கட்டத்தை அடைய முயற்சியில் உள்ளார் என்று பேசபடுகிறது நீட நாள் ஆசை இதனால் பல துன்பங்கள் அடைந்தவர் விஜய்க்கு அரசியல் மீது தனி ஆர்வம் என்று தான் சொல்லணும் இதற்கு தான் மக்கள் கட்சி என்று ஆரம்பித்தார். இது ஆரம்பித்ததிலிருந்து இவருக்கு கொஞ்சம் பிரச்னை இப்ப மீண்டும் அந்த ஆசை அவரை விடவில்லை அந்த ஆட்டத்தை மீண்டும் ஆடம்ப ஆரம்பித்துள்ளார் என்று அரசல் புரசலாக பேசபடுகிறது .

கடந்த சில தினங்களாகவே கோடம்பாக்கம் குறுகுறுப்பாக கவனித்து வரும் ஒரு விஷயம்… “விஜய் என்ன பண்ணுறார்?” என்பதுதான்.

அவருதான் பைரவா ஷுட்டிங்ல இருக்காரே… அதைவிட வேறென்ன பண்ணப் போறார்? இப்படிதானே பதில் வரும்? ஆனால் கோடம்பாக்கத்தின் குறுகுறு கவனிப்புக்கு பின் வரும் பதில், அது இல்லீங் !

சென்னையில் ஆக்டிவாக இருக்கும் அவரது மன்றப் பொறுப்பாளர் ஒருவரும், விஜய்யின் முன்னாள் பிஆர்ஓ ஒருவரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆக்டிவாக இருந்து தற்போது அதிருப்தியாக இருக்கும் சில தேமுதிக நிர்வாகிகளுக்கு போன் அடிக்கிறார்களாம். “நம்ம இயக்கத்துக்கு வந்திருங்க. உங்களுக்கு பிரைட்டான எதிர்காலத்தை ஏற்படுத்தி தர்றோம்” என்கிறதாம் இந்த போன் உரையாடல்.

இதையெல்லாம் விஜய் செய்யச் சொன்னாரா? அல்லது இவர்களாகவே ஆர்வ மிகுதியால் இப்படி செய்கிறார்களா தெரியாது. ஆனால் இவர்கள் அடித்த பந்து சரியாக கோல் போட்டிருக்கிறதாம். சிலர், நாங்க ரெடி…எப்போ எப்போ என்று கேட்டு வருவதாகவும் தகவல்.

ஒரு காலத்தில் விஜய்யை கிராமம் வரைக்கும் அழைத்துச் சென்றவரே விஜயகாந்த்தான். அவரது கட்சியிலேயே ஓட்டை போடுகிற வேலை நடக்கிறதே… அது தர்மமா? நியாயமா? என்ற கேள்விகள் எழும் முன் சுதாரித்துக் கொள்வது விஜய் நற்பெயருக்கு நல்லது.

Leave a Reply