
நடிகர் விஜய்யின் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. அதில் இருந்து இப்படம் குறித்த செய்திகள் வெளியாகிக் கொண்டே வருகிறது.

நடிகர் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க உள்ள தளபதி 64 படம் குறித்த அப்டேட் அதிகராப்பூர்வமாக வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் போஸ்டர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு தளபதி 64 திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
