
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிக பெரிய இடத்தை பிடித்த ஹீரோகள் என்றால் அது விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் இருவரின் வளர்ச்சி தமிழ் சினிமாவின் வளர்ச்சி போல ஆகிவிட்டது காரணம் இவர்களை வைத்து படம்எடுக்கும் எடுக்கும் தயாரிப்பாளர்கள் நஷ்டம் என்ற வார்த்தையை சொன்னது இல்லை . இது மிகபெரிய வளர்ச்சி . போட்டி இருக்கணும் பொறமை இருக்க கூடாது என்பதற்கும் இருவரும் உதாரணம் .
‘ஆரண்ய காண்டம்’ என்கிற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தியாகராஜன் குமாரராஜா. இவர் ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் படம் இயக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு இணையாக மலையாள நடிகர் பஹத் பாசிலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. மேலும் சமந்தா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
