Monday, May 20
Shadow

தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க நூலகம் ஆரபிக்கும் விஜயின் மக்கள் இயக்கம்

 

நடிகர் விஜய் திரைப்படங்கள் மூலம் பிரபலமாகி இன்று தமிழ் நாட்டு மக்களால் மிகவும் நேசிக்கப்படுகின்ற மனிதர்களில் அவரும் ஒருவராகிவிட்டார். என்று சொன்னால் மிகையாகாது சமீப காலமாக இவர் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக பரவலாக செய்திகள் வருகிறது அதை பற்றி அவரும் ஈர்க்கும் வகையில் சில விஷயங்கள் செய்து வருகிறார். சமீபத்தில் நடந்த லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் கூட ஒருவர் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் லோகேஷ் கனகராஜ் என்ன துறை மந்திரி பதவி கொடுப்பீர்கள் என்று கேட்டதுக்கு போதை ஒழிப்பு துறை கொடுப்பேன் என்று சொன்னார் .எனவே இவர் அரசியலுக்கு வருவது ஊர்ஜிதம் ஆனாது, அதற்கு அச்ச்சாரமாக இப்பவே பல வேலைகள் செய்ய ஆரம்பித்து விட்டார். இதனினி அடுத்த கட்டமாக சென்னை அருகே இவரின் மக்கள் இயக்கம் சார்பாக  தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க, நூலகம் திறக்க ஆரம்பிக்க உள்ளனர்.

தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி விஜய் பயிலகம் திட்டத்தினை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில்!

புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் தற்போது முதற்கட்டமாக “தளபதி விஜய் நூலகம்” திட்டம் நாளை சனிக்கிழமை (18/11/2023) அன்று காலை 10.35 மணியளவில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3-வது தெரு, CTO காலனி, மேற்கு தாம்பரத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் திரு.புஸ்ஸி.N.ஆனந்து அவர்கள் துவக்கி வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்லாவரம் தொகுதியில் தாம்பரம் மாநகராட்சி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில் “தளபதி விஜய் நூலகம்” திட்டத்தினை துவக்கி வைக்கிறார்.
அதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களிலும், அரியலூர், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு இளைஞரணி மற்றும் வேலூர் தொண்டரணி ஆகிய மாவட்டங்களை சேர்த்து 11 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது.

மேலும் இரண்டாம் கட்டமாக வருகின்ற 23.11.2023 (வியாழக்கிழமை) அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து இடங்களிலும், கோவை மாவட்டத்தில் நான்கு இடங்களிலும் ஈரோடு மாவட்டத்தில் மூன்று இடங்களிலும் தென்காசி மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும் சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்த்து 21 இடங்களிலும்

தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது