
விஜய்காந்த் தமிழ் சினிமாவிற்கு வந்து 40 வருடங்கள் ஆகியுள்ளது. அவரை பெருமை படுத்தும் வகையில் சிறப்பு விழா நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட S.A.சந்திரசேகர் அவர்கள் பேசினார். அப்போது அவர் பேசியதாவது.
எனது மகன் விஜய்யை நான் ” நாளைய தீர்ப்பு ” மூலம் சினிமா உலகில் அறிமுகம் செய்துவைத்தேன். ஆனால் அந்த படம் அவரை கைவிட்டது. சில புத்தங்கள் விஜய்யை மோசமாக விமர்சனம் செய்தது. அப்போது நான் விஜய்காந்திடம் நம்பிக்கை வைத்தேன். ” செந்தூரபாண்டி ” படத்தில் விஜய்காந்த் தம்பியாக விஜய்யை நடிக்க வைத்தேன். இவர் ரசிகர்கள் படம் பார்க்க வரும்போது விஜயின் நடிப்பை பார்ப்பார்கள் என்பதற்காக.
நான் நினைத்தப்படியே அந்தப் படம் என்னை கைவிடவில்லை. விஜயின் வாழ்க்கை பயணம் தொடர்ந்தது, தொடர்கிறது இன்னும் முக்கியமான விஷயம் சொல்லனும் என்றால் செந்தூரபாண்டி படத்துக்கு விஜய்காந்த் எந்த விதம் பணம் வாங்கவில்லை எனக்காக வந்து நடித்து கொடுத்தார். இந்த ஒரு நல்ல மனப்பான்மை இருக்ககிறது நாலதான் இவர் இன்னும் கேப்டனாக இருக்கிறார் என்று கூறினார்.
