
இந்திய சுனுமாவின் பொக்கிஷம் இசை சாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தி பாபெரும் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமநணியம் 16 மொழிகளில் பாடியவர் கிட்டதட்ட 40,0000 பாடல்கள் மேல் பாடியவர் நூறுக்கும் மேற்பட்ட விருதுகள் இத்தனை பெருமைகள் இருந்தும் குணத்தால் குழந்தை மனம் படைத்தவர். இவர் சமீபகாலமாக உடல் நலை குறைவால் மருத்துவமனையில் அனுமத்திக்கபட்டார் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்
இவருக்காக இந்திய சினிமாவே துயறத்தில் ஆழ்ந்தது ஏன் இந்திய மக்களே துயரத்தில் ஆழ்ந்தனர்.இவரை பற்றி நம் சியான் விக்கிரமின் அனுதாபஙலை தெரிவித்துள்ளார்.
திரு S.P.B. அவர்களின் மறைவிற்கு சீயான் விக்ரம் அவர்களின் இரங்கல் செய்தி…
மொழி பேதம் இன்றி இந்த உலகில் இசை பிடிக்கும் எனில், இவரை பிடிக்கும். இவரது குரலின் வலம், கம்பிரம், அழகு, இவருடைய இசை ஞானம் அனைத்தையும் பல ஆண்டுகளாக ரசித்து போற்றிய கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். திரு S.P.B. அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
சீயான் விக்ரம்…