Wednesday, July 17
Shadow

தமிழ் சினிமாவில் 17ம் ஆண்டில் வெற்றி கொடி கட்ட கால் பதிக்கும் விஷால்

தமிழ் சினிமா சாமான்யர்களை என்றும் கைவிட்டதில்லை ஆம் பல்வேறு திறமைகளுடன் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் விஷால் உதவிய இயக்குனராக தமிழ் சினிமாவில் களம் இறங்கி பின்னர் செல்லமே படம் மூலம் நாயகனாக அறிமுகமானார்.திரைத்துறையில் நடிகர் விஷால் அறிமுகமாகி இன்றுடன் 16 ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. அவர் நடித்த ‘செல்லமே’ திரைப்படம் 2004ம் ஆண்டு இதே நாளில் திரைக்கு வந்தது.


ஆக, விஷால், திரைத் துறைக்கு வந்து 16 ஆண்டு நிறைவு பெற்றதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இவர் தமிழ் சினிமாவில்தொடர்ந்து பல சாதனைகளை நிகழ்த்தியவர் வெற்றிகளை மட்டும் களம் கண்டவர் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் தயாரிப்பு சங்க தலைவர் நடிகர் சங்க செயலாளர் என்று வெற்றி கோடி நாட்டியவர். இவரின் வெற்றி பயணம் மேலும் தொடர சினிமா பிளஸ் சார்பாக வாழ்த்துகள்