Friday, April 17
Shadow

விஷ்னு விஷாலின் “மோகன்தாஸ்” படத்தின் முதல் பார்வை போஸ்டர் மக்களின் வரவேற்ப்பில்

மோகன்தாஸ் பெயரில் ரத்தக் களறியான டீசர் உருவாக்கிய நாளைய புது மாப்பிள்ளை விஷ்ணு விஷால்!

பாலிவுட் தொடங்கி நம்ம கோலிவுட் வரைக்கும் கொரோனா பீதியால் முடங்கிக் கிடக்கும் சூழலில் தமிழ் சினிமாவில் இன்னிக்கும் இளம்கதாநாயகம் என்ற மீடியம் பட்ஜெட்டில் இருக்கும் விஷ்ணு விஷால் புதுசா ஒரு பட டைட்டிலையும், டீசரும் ரிலீஸ் பண்ணி கோலிவுட்டை தெறிக்க வச்சிப்புட்டார்.

.வெண்ணிலா கபடி குழு, முண்டாசுபட்டி, ஜீவா உள்ளிட்ட இவர் நடித்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் நடிப்பில் வெளியான ராட்சன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. விஷ்ணு விஷால் தற்போது F.I.R என்கிற படத்தில் நடிச்சிருக்கார்.

மேலும் இந்த விஷ்ணு விஷால் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செஞ்சு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். ஆனா இருவருக்கும் ஏனோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அப்பாலே தன் காதல் மனைவியை பிரிந்து, மதுவுக்கு அடிமையானது, அதிலிருந்து மீண்டு வந்தது பற்றி இரண்டு பக்க கடிதத்தை டுவிட்டரில் வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தினார்

அதை அடுத்து விஷ்ணு விஷால் தோழியான பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா, விஷ்ணு விஷால் மற்றும் தனுக்கு இருக்கும் உறவு குறிச்சு , ஆமாய்யா.. ஆமா நாங்கள் இருவரும் டேட்டிங் செஞ்சு வாரோம்.. நான் முன்னாடியே சொன்னது போல இதுலே மறைக்க எதுவுமே கிடையாது விரைவில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம்.. திருமண தேதி முடிவு அல்லது இதுகுறித்து ஏற்பாடுகள் நடந்தாலும் நாங்கள் விரைவில் அறிவிப்போம் அப்படீன்னு சொல்லி இருந்தார்

இந்நிலையில்தான் விஷ்ணு விஷாலின் அடுத்தப்படமான மோகன்தாஸ் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. முரளி கார்த்திக் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தின் டீசரும் மிரளும் வகையில் இருப்பதுடன் காந்தி அடிகளின் பெயரையும், அவர் போதனைகளையும் ரத்த களறியுடன் வெளிப்படுத்தி இருக்கும் டீசரை இச்சுழலில் எப்படிப்பா இப்படியொரு கொடூரம் பண்ணினீங்க-ன்னு கேட்டத்துக்கு , ”லாட் டவுன் ஆரம்பிப்பதற்கு முன்னர், சில பேரை மட்டுமே வைத்து கொண்டு, இந்த டீசரை எங்கள் ஆபிசிலேயே உருவாக்கிப் புட்டோம். அதிலும் அரசு சொல்லிய சமூக விலகலை கடைபிடித்து இந்த டீசரை உருவாக்கினோம்” அப்படீ-ன்னு சொன்னவர்கிட்டே ‘சமூக விலகலே லாக் டவுன் ஆரம்பிச்ச பொறகு தானே வந்துச்சு’-ன்னு கேட்பதற்குள் லைன் கட் ஆயிடுச்சு