
உலக தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிபார்த்து கொண்டு இருக்கும் நாள் என்றால் அது மே 1ம் தேதி காரணம் அஜித் பிறந்தாநாள் மட்டும் இல்லை விவேகம் படத்தின் டீசர் வெளியாகும் நாள் என்று அஜித் ரசிகர்கள் சொன்னதால் தான் ஆனால் உண்மை நிலைமை வேறு அஜித் நடிப்பில் உருவாகிவரும் ‘விவேகம்’ படத்தை பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். இப்படத்தின் பஸ்ட் லுக் மற்றும் புகைப்படங்கள் சில வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் டீஸர் எப்போது வெளியாகும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர் .
இந்த நிலையில் ‘விவேகம்’ படத்தின் டீஸரை அஜித்தின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதுகுறித்து படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், ‘விவேகம்’ படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் தரப்பில் விசாரித்தபோது, “விவேகம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீஸரை எடிட்டர் ரெடி பண்ணி வைத்திருப்பதாகவும், அதை அஜித் பார்த்துவிட்டு ஓகே சொன்ன பிறகு மே 1 ஆம் தேதி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும்” தெரிவித்தனர்.
அதுமட்டுமல்ல, பர்ஸ்ட் லுக் டீஸரை தொடர்ந்து ‘விவேகம்’ படத்தின் ஆடியோ, ஜூன் மாதம் இறுதியில் வெளியாகிறது. ‘விவேகம்’ படத்தை ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கு ஏற்றார்போல் பட வேலைகளை படு விறுவிறுப்பாக செய்து வருகின்றனர் படக்குழுவினர். ஒருவேளை தாமதமானால் ஆகஸ்ட் கடைசி வாரம் வெளியிட உள்ளனராம்.