Sunday, October 12
Shadow

ஜோதிடத்தில் நாம் தெரிந்து கொள்ளவேண்டியை

ஜோதிடத்தில் ஜாதகம், நியூமராலாஜீ, நாடி, வாஸ்து, ஜெம்மாலஜீ என்று பல பிரிவுகள் இருந்தாலும் அடிப்படையானது ஜாதகம் கொண்டு பலன் சொல்வதே ஆகும். ஒருவரின் ஜாதகம் சரியாக இருந்துவிட்டால் அதை கொண்டு பலன் பார்த்தாலே போதும் மற்றவற்றை நாட தேவையில்லை. ஆனால் ஜாதகம் துல்லியமானதாக இருக்க வேண்டும்.

ஜாதகம் சரியாக கணிக்க பிறந்ததேதி, பிறந்தவூர் மற்றும் பிறந்த நேரம் மிக அவசியம். இவை மூன்றும் சரியாக இருந்தால்தான் ஜாதகரின் பிறந்த லக்கினத்தினை சரியாக அறிய முடியும். லக்கினமே ஒரு ஜாதகரின் தன்மை, பிறப்பு, நடத்தை மற்றும் குணாதிசயங்களை நிர்ணயிக்கிறது. லக்கினத்தை கொண்டே மற்ற பாவங்களையும் அவை தரும் பலன்களையும் கணக்கிட முடியும், சரியான ஜாதகத்தை கொண்டு ஜாதகரின் பிறப்பு மட்டுமின்றி அவரின் படிப்பு, காதல், திருமண்ம், தொழில், வேலைவாய்ப்பு, மக்கட்செல்வம், வழக்கில் வெற்றி, வெளிநாட்டுபயணம், உடல்நிலை போன்ற விஷயங்களையும் அறிய முடியும். ஆக ஜாதகம் கொண்டு பலன் பார்ப்பதே நன்மைபயக்கும் என்பதை வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாளை முதல் நாம் நட்சத்திர தினபலன்களை தெரிந்து கொள்ளலாம்.

-ஜோதிடர் கிருஷ்ண வாசுதேவன்.

Leave a Reply