Tuesday, April 28
Shadow

தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் தர்பார். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். மேலும், இந்தபடத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும், ரஜினியின் மகளாக நிவேதா தாமசும் நடிப்பதாக செய்திகள் வெளியானபோது, நயன்தாரா தவிர வேறு யாரும் இன்னும் உறுதியாகவில்லை என படக்குழு விளக்கம் அளித்தது.

இந்தநிலையில், தற்போது தர்பார் படத்தில் ரஜினியுடன் மோதும் வில்லனாக ஹிந்தி நடிகர் பிரதீக் பாப்பர் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகனாக நடித்தவர்.

பிரதீக் பாப்பர் இதுவரை ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்தவர். முதன்முதலாக தர்பாரில் வில்லனாக நடிக்கிறார். ரஜினி உடன் நடிப்பது பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ரஜினிகாந்த் ஒரு சகாப்தம். அப்படியொரு நடிகருடன் நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நான், தர்பாரில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.