Monday, April 20
Shadow

மகளிர் தினத்தில் “பேட்ரியாட்” படத்தின் பெண்கள் கதாபாத்திரங்கள் கவனம் – நயன்தாரா போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது!

மகளிர் தினத்தில் “பேட்ரியாட்” படத்தின் பெண்கள் கதாபாத்திரங்கள் கவனம் – நயன்தாரா போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது!

மலையாள சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ஸ்பை த்ரில்லர் திரைப்படமான Patriot படத்தின் பெண்கள் கதாபாத்திரங்களின் சிறப்பு போஸ்டர்கள் மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் வெளியிடப்பட்ட இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

அதில் குறிப்பாக முன்னணி நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் போஸ்டர் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கும் நயன்தாரா, இந்த படத்தில் வலுவான மற்றும் முக்கியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் ரேவதி கிரேஸ் ஆண்டனி கீர்த்தி சங்கீதா ஸ்ரீ பார்வதி தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் ஷெரின் ஷகாப் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் இந்த மல்டி ஸ்டார்ரர் திரைப்படத்தில் மம்முட்டி மோகன்லால் மற்றும் பகத் பாசில், குஞ்சன்கோ கோபம், நயன்தாரா மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக வெளியான இரண்டாம் லுக் போஸ்டரில் மம்முட்டி மோகன்லால் மற்றும் குஞ்சன் கோ போபன் மாஸ் ஆக்ஷன் தோற்றத்தில் இடம்பெற்றிருந்தனர். அந்த காட்சியின் பின்னணியில் எடுக்கப்பட்ட BTS வீடியோவும் தற்போது வெளியிடப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

மலையாள சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்த படம் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, அசர்பைஜான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் 18 ஆண்டுகளுக்கு பிறகு மம்முட்டி மற்றும் மோகன்லால் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிப்பதும் படத்தின் முக்கிய சிறப்பாகும்.

இந்த படத்திற்கு சுசேன் ஷாம் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை மனுஷ் நந்தன் மேற்கொண்டுள்ளார்.

அண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி மற்றும் கிச்சாபூ பிலிம்ஸ் நிறுவனங்களின் சார்பில் அண்டோ ஜோசப் தயாரிக்கும் இந்த படம், மலையாள சினிமாவில் சர்வதேச தரத்தில் உருவாகும் மிகப்பெரிய ஸ்பை த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது.

இந்த படம் உலகம் முழுவதும் வரும் 2026 ஏப்ரல் 23 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மக்கள் தொடர்பு : யுவராஜ்

விநியோகம் : Aan Mega Media


Women’s Day Special: Nayanthara’s Character Poster from “Patriot” Unveiled

Special character posters of the female leads from the upcoming Malayalam big-budget spy thriller have been released to mark Women’s Day. The posters were unveiled starting from 10 AM, with one poster released every hour, drawing significant attention from fans.

Among them, the character poster of leading actress has received a particularly strong response from audiences. One of South Indian cinema’s top stars, Nayanthara is said to be playing a powerful and significant role in the film.

The movie also features , , , , , and in important roles.

Directed by , this multistarrer spy thriller features , , , , , and in key roles.

Earlier, the film’s second-look poster featuring , , and in intense mass-action looks had generated huge buzz. A behind-the-scenes (BTS) video from that scene has now also been released, further increasing audience excitement.

Made on one of the biggest budgets in Malayalam cinema, the film has been shot across multiple countries including India, Sri Lanka, the United Kingdom, Azerbaijan, and the United Arab Emirates. Another major highlight is the reunion of and on screen after 18 years.

The music for the film is composed by , while cinematography is handled by .

Produced by under the banners of and , the film is shaping up to be a grand international-standard spy thriller from Malayalam cinema.

“Patriot” is scheduled for a worldwide theatrical release on April 23, 2026.

PRO: Yuvraaj
Distribution: Aan Mega Media