சமீபத்தில் காஜல் அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசிய சில விஷயங்கள் அதிலும் குறிப்பாக சினிமாவில் ஏன் நடிகுறேன் என்பதை பற்றி சொன்ன விஷயங்கள்.
“கதாநாயகிகள் பலர் நல்ல கதை மற்றும் கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் முக்கியம் என்கின்றனர். ஆனால் பணமும் முக்கியம்தான். நான் நடிக்க வந்த புதிதில் பணம் பற்றி சிந்திக்கவில்லை. அந்த நேரத்தில் எவ்வளவு பணம் சம்பளமாக கொடுத்தார்கள் என்றும் நினைவில்லை. கொடுத்ததை வாங்கிக்கொள்ளும் நிலையில்தான் இருந்தேன்.
சினிமாவில் நடித்தோமா? சென்றோமா? என்ற மனநிலையே இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. மாறிவிட்டேன். ஒரு படத்தில் மனதுக்கு திருப்தி அளிக்கும் நல்ல வேடங்களில் நடிக்க வேண்டும் என்றும் அடுத்த படத்தில் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வகையில் நடிக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன். நடிகைகளுக்கு பணம் முக்கியம். எல்லோரும் பணத்துக்காகத்தான் நடிக்கிறார்கள். நானும் பணத்துக்காகத்தான் நடிக்கிறேன்.
சினிமாவில் நடித்து ஒரு வருடம் முடிந்ததும் எவ்வளவு படத்தில் நடித்தோம். அதில் கிடைத்த வருமானம் எவ்வளவு எனது உழைப்புக்கு ஏற்றமாதிரி வருமானம் கிடைத்துள்ளதா? என்று கணக்கு பார்ப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறேன். அதில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் அடுத்த வருடம் அதை சரிப்படுத்திக்கொள்வது போல் படங்களில் நடிப்பதை வடிவமைத்துக்கொள்வேன்.”
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
காஜல் அகர்வால் ‘கவலை வேண்டாம்’ படத்தில் ஜீவா ஜோடியாக நடித்து முடித்துள்ளார். இந்த படம் திரைக்கு வர தயாராகிறது. பெயரிடப்படாத அஜித்குமாரின் 57-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். 2 தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார்.