Friday, June 21
Shadow

”டைகர் 3’யில் நாங்கள் என்ன வைத்திருக்கிறோம் என்பதில் 1 % கூட நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்” ; மனீஷ் சர்மா*

டைகர் 3’யில் நாங்கள் என்ன வைத்திருக்கிறோம் என்பதில் 1 % கூட நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்” ; மனீஷ் சர்மா

‘டைகர் 3’யின் டீசர் மற்றும் டிரைலரின் நம்பமுடியாத வெற்றி, அதை பார்த்து ரசிப்பதற்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் கண்கவர் ஆக்சன் படமாக மாற்றியுள்ளது என்கிற இயக்குநர் மனீஷ் சர்மா, யஷ்ராஜ் பிலிம்ஸ் ‘டைகர் 3’யின் ஒவ்வொரு விஷயத்தையும் ரகசியமாக அதேசமயம் புத்திசாலித்தனமாக நடத்தி வருகிறது” என்கிறார்..

மனீஷ் கூறும்போது, “டைகரின் கதை எப்படி நகரும் என்பதை காட்டும் விதமாக’டைகர் 3’யின் டீசரையும் டிரைலரையும் நாங்கள் உருவாக்கினாலும், அதனுள்ளே பெரிய திரையில் மிகச்சிறந்ததாக காட்டுவதற்காக என்ன வைத்திருக்கிறோம் என்பதில் 1 % கூட நீங்கள் பார்த்திருக்க முடியாது” என்கிறார்.

யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸில் இருந்து லேட்டஸ்ட்டாக வெளியான ‘டைகர் 3’யின் டீசர் மற்றும் டிரைலர் இரண்டுமே, இந்த பண்டிகை காலத்தில் திரையரங்குகளில் படம் பார்க்கும் ரசிகர்களின் அட்ரிலினை அதிகம் சுரக்கவைக்கும் ஆக்சன் கொண்டாட்டமாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்திய சினிமாவின் மெகா ஸ்டார்களான சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் இருவரும் தங்களது சூப்பர் உளவாளி கதாபாத்திரங்களான டைகர் மற்றும் சோயா என்கிற அடையாள கதாபாத்திரங்களுக்கு திரும்பியுள்ளனர்.

மனீஷ் மேலும் கூறுகையில், “படத்தின் 50 முதல் 60 சதவீதம் வரை மிக பிரமாண்டமான ஆக்சன் காட்சிகளை கொண்டதாக இருக்கும். மேலும் நீங்கள் இதில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதற்கான ஒரு சிறிய பார்வையை உங்களுக்கு தருவதற்கு நாங்கள் விரும்பினோம்.. நீங்கள் இந்தப்படத்தை பார்க்கும்போது உணரும் ஆச்சரியமும் பரவசமும் நீங்கள் கொஞ்சமும் எதிர்பாராததாக இருக்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

டைகர் 3 போல ஒரு படத்தை பார்க்கிறீர்கள் என்றால் நீங்கள் பொறுமையாக இருப்பதுடன் எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்வதும் ரொம்பவே முக்கியமானது. எல்லாவற்றையும் முன்கூட்டியே கொடுத்துவிட்டோம் என்றால்.. ? நீங்களே கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.. அதனால் தான் மிகுந்த உற்சாகம் தரும் எங்கள் படத்தின் சில காட்சிகளை ‘டைகர் 3’யின் டிரைலரில் கூட காட்டவில்லை. எனவே தியேட்டரில் ரசிகர்கள் படத்தை பார்க்கும்போது விசிலடித்தும் மூச்சுத்திணறும் அளவுக்கு சத்தமிட்டும் உற்சாகத்துடன் படத்தை பார்க்க முடியும்” என்கிறார்.

மனீஷ் மேலும் கூறும்போது, “’டைகர் 3’ பெரிய திரைக்கான கண்கவர் காட்சி என்பதால் மக்கள் திரையரங்கின் உள்ளே அமர்ந்து ஆச்சர்யத்துடன் பார்த்து ரசிக்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். திரையரங்குளில் உறுமலுடன் வரப்போகும் ‘டைகர் 3’ அவர்களுக்கான இந்த வருடத்தின் தீபாவளி கொண்டாட்டமாக இருக்கவேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். அதை நாங்கள் செய்யமுடியும் என்றால் ‘டைகர் 3’ குழுவினருக்கு அதுதான் மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும்” என்கிறார்.

வரும் நவ-12ல் தீபவாளி வெளியீடாக ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ‘டைகர் 3’ வெளியாகிறது.

*‘You haven’t even seen 1% of what we have in store in Tiger 3!’ : Maneesh Sharma*

While the incredibly successful teaser& trailer of Tiger 3 has made the action spectacle the most anticipated movie to watch out for, director Maneesh Sharma says YRF has cleverly managed to keep every beat of Tiger 3 a secret!

Maneesh reveals, “We built the teaser and the trailer of Tiger 3 to show how Tiger’s story moves forward but you haven’t even seen 1 % of what we have in store – we’re saving the best for the big screen!”

The teaser and the trailer of YRF Spy Universe’s latest offering Tiger 3 promise of an adrenaline pumping action extravaganza in theatres this festive season! The film has megastars of Indian cinema Salman Khan & Katrina Kaif reprising their iconic roles of super spies Tiger & Zoya!

Maneesh further reveals, “Around 50-60 percent of the film are action sequences of great scale and we wanted to just give you a small peek into what you can expect. We want that surprise and the euphoria you feel when you’re watching something you didnt even expect!”

He adds, “When you have a film like Tiger 3, it is important that you hold back and keep building anticipation. Imagine if we’d just given everything away already! That’s why we made sure that some of our most exciting sequences dont even show up on the trailer so that Tiger’s fans can gasp and whistle and scream in the halls!”

Maneesh further says, “Tiger 3 is a big screen spectacle and we want people to come in and be thoroughly surprised. We want them to have a ‘Diwali Dhamaaka’ this year when Tiger 3 comes roaring into cinemas. If we can do that, well, thats what will give the team of Tiger 3 most joy!”

Tiger 3 is set to release this Diwali, Nov 12, Sunday in Hindi, Tamil & Telugu.