Tuesday, June 6
Shadow

அஜித்துடன் சேர்ந்து நடிக்க ஆசை படும் விக்ரம்

விஜய்-அஜித் இருவரும் ராஜாவின் பார்வையிலே -என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதேபோல், அஜித்-விக்ரம் இருவரும் உல்லாசம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர்.

1997இல் வெளியான இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற விளம்பரப்பட இரட்டை இயக்குனர்கள் இயக்கியிருந்தனர்.

அந்த படத்தில் மகேஸ்வரி நாயகியாக நடித்திருந்தார். அதன்பிறகு அஜித்- விக்ரம் இருவரும் இணையவில்லை. இந்நிலையில், மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்தால் அஜித்துடன் இணைந்து நடிக்க தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார் விக்ரம்.

இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்தியில், உல்லாசம் படத்தில் நடித்தபோதில் இருந்தே அஜித்துடன் எனக்கு நல்ல நட்பு இருந்து வருகிறது. நிறைய ரசிகர்கள் அவருக்கு இருக்கிறார்கள்.

மாஸ் ஹீரோவாகிவிட்ட அஜித்துடன் மீண்டும் நல்ல வேடம் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ள விக்ரம், தமிழ் ஹீரோக்களில் நல்ல அழகியலுடன் டிரஸ் அணிவதில் அஜித்துக்கு இணை யாருமில்லை. நல்லதொரு டிரஸ்ஸிங் சென்ஸ் உள்ள அழகான நடிகர் அவர் என்று கூறியுள்ளார்.

Leave a Reply