Tuesday, September 10
Shadow

பத்திரிக்கையாளர்களிடம் மோதும் நடிகர் சித்தார்த்

சமீபகாலமாக நானும் இருக்கிறேன் என்று எதாவது பிரச்சனையை தானாக தேடி வம்பு இழுத்து இருப்பவர் சித்தார்த் சில காலமாக நடிகர்களிடம் மோதி கொண்டுயருந்த சித்தார்த் இப்ப பத்திரிக்கையாளர்களிடம் மோத பார்கிறார் .

சமூக வலைதளங்களில், சினிமா விமர்சனம் செய்யும் ரசிகர்களுக்கு, நடிகர் சித்தார்த், காட்டமாக பதிலளித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;

தியேட்டருக்கு சென்றால், ஏதாவது ஒரு ஸ்கிரீனை தான், நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்; அது எது? படமா அல்லது உங்களின் முட்டாள் போனா? படம் பிடித்திருந்தால் பாராட்டுங்கள்; பிடிக்கவில்லை என்றால், பிடிக்கவில்லை என்றே கூறிவிடுங்கள். ஆனால், படத்தை பார்க்க வேண்டாம் என, மற்றவர்களிடம் கூறுவது கீழ்த்தரமானது.

யாராவது தியேட்டரில், ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை பார்த்தால், தட்டிக் கேளுங்கள்; இருட்டில் தான் படம் பார்க்க வந்துள்ளீர்கள்; நீங்கள், அதற்காக காசும் தருகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply