
காமெடி ட்ராக்கிலிருந்து ஹீரோவாக ஜெயித்து வருகிறார் நடிகர் சந்தானம். தில்லுக்கு துட்டு வெற்றியின் பாதையில் அடுத்த அவர் நடிக்கும் சர்வர் சுந்தரம் படத்தில் அரைத்த மாவை அரைக்காமல் புதிய பரிமாணத்தை காண்பிக்க மிகவும் மெனக்கெட்டு நடித்து வருகிறாராம்.
ஒவ்வொரு படத்துக்கும் ஏதாவது வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்பது தான் அவரது இலக்கு. அதை நிரூபிக்கும் படியாக சர்வர் சுந்தரம் படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க போகிறார், அதே சமயம் ஒரு புது இயக்குனர் சொன்ன கதை பிடித்து போக அதிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
புது இயக்குனர் சொன்ன கதையில் புலியுடன் நடிக்க போகிறாராம் சந்தானம், கிராபிக் புலியை உருவாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. சந்தானம் செல்வராகவன் படத்தில் நடித்து கொண்டே, இந்த படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். ஆகையால் விஜய் சேதுபதி போல் படத்துக்கு படம் வித்தியாசத்தையும் காட்டி, அதே சமயம் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று படங்களிலும் நடிப்பது சந்தானத்தின் அடுத்த பிளான்.