ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றி பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் ‘வீர சிவாஜி’ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இதன் கூடவே ‘கத்திச் சண்டை’ படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதி பாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன், இசை – ‘ஹிப் ஹாப்’ தமிழா, பாடல்கள் -நா.முத்துக்குமார், ‘ஹிப் ஹாப்’ தமிழா, எடிட்டிங் – ஆர்.கே.செல்வா, சண்டை பயிற்சி –கனல் கண்ணன், தளபதி தினேஷ், ஆக்ஷன் கணேஷ், கலை -உமேஷ்குமார், நடனம் -தினேஷ், ஷோபி, தயாரிப்பு மேற்பார்வை – பிரேம் ஆனந்த், தயாரிப்பு – எஸ்.நந்தகோபால், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சுராஜ்.
படம் பற்றி இயக்குநர் சுராஜ் பேசும்போது, “விஷால் நடித்த படங்களிலேயே இந்த படம்தான் அதிக பொருட் செலவில் தயாராகியுள்ளது. இந்த படத்தின் பாடல் காட்சிகளுக்காகவும், சண்டை காட்சிகளுக்காகவும், இதர காட்சிகளுக்காகவும் கலை இயக்குநரான உமேஷ் குமாரின் கை வண்ணத்தில் பிரம்மாண்டமான செலவில் ஏராளமான அரங்குகள் அமைக்கப்பட்டு படமாக்கியிருக்கிறோம்.
படத்தின் முதல் பாதியில் சூரியும், இரண்டாம் பாதியில் வடிவேலுவும் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். பக்கா கமர்ஷியல், ஆக்ஷன், காமெடி படமாக உருவாகியுள்ள இந்த ‘கத்திச் சண்டை’ படம் வரும் தீபாவளியன்று வெளியாக உள்ளது..” என்றார்.