Wednesday, November 5
Shadow

இந்த வருடத்தின் அதிக லாபம் கொடுத்த படம் என்றால் அது கார்த்தியின் “கடைக்குட்டி சிங்கம்”

தமிழ் சினிமாவில் வருடத்துக்கு இருநூறுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிறது ஆனால் இதில் எல்லா படங்களும் லாபம் கொடுக்கிறதா என்று பார்த்தால் இல்லை குறிப்பாக இந்த இருநூறு படங்களில் மிக சொற்ப படங்கள் மட்டும் தான் லாபம் கொடுக்கிறது என்று சொன்னால் மிகையாகது இதில் ஒரு கவனிக்க வேண்டிய விஷயம் இதில் அதிக பட்ஜெட் அதிக தோல்வியை கொடுக்கிறது அந்த வகையில் இந்த வரு ரிலீஸ்யில் அதிக லாபம் கொடுத்த படம்.

தமிழ் சினிமாவின் சமீபத்திய சூப்பர்ஹிட் படங்களில் ஒன்று ‘கடைக்குட்டி சிங்கம்’. இந்தப் படம் வெளியான அன்று ஒரு டிவி சீரியல் போல உள்ளதாக விமர்சித்தவர்களின் முகத்தில் கரியைப் பூசி இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. 75 நாட்களைக் கடந்தும் படம் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50 கோடியும், மற்ற மாநிலங்களில் 10 கோடியும், வசூலித்த இந்தப் படம் மொத்தமாக சுமார் 70 கோடியை வசூலித்துள்ளது. 100 சதவீதத்திற்கும் மேலான லாபத்தைக் கொடுத்துள்ளதாக வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை ஆகியவை மூலம் சுமார் 10 கோடி தயாரிப்பாளருக்குக் கிடைத்திருக்கும்.

தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் என அனைவருக்கும் சமீப காலத்தில் முழு லாபத்தைக் கொடுத்த படம் என ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை கோலிவுட்டில் குறிப்பிடுகிறார்கள்.