Thursday, April 23
Shadow

“99/66 – தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு” புத்த மடாலயங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்ற படப்பிடிப்பு

“99/66 – தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு”
புத்த மடாலயங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்ற படப்பிடிப்பு

மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் ஹாரர் திரைப்படமான “99/66 – தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு” படப்பிடிப்பு தாய்லாந்து, பர்மா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ள புத்த மடாலயங்களில் அரசு அனுமதியுடன் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட புத்த பிக்குகளின் மத்தியில் பாடல் மற்றும் முக்கிய காட்சிகளும் படமாக்கப்பட்டது என்பது இந்த படத்தின் சிறப்பம்சமாகும்.

எம். எஸ். மூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதுவதுடன், இசையமைத்து, இயக்கி, தயாரித்திருக்கும் இத்திரைப்படம் சென்னையை மையமாகக் கொண்ட 99 அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தில் சபரி, ரோகித் ஆகியோர் கதாநாயகர்களாகவும், ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் பவன்கிருஷ்ணா, கே.ஆர். விஜயா, கே.எஸ். வெங்கடேஷ், எஸ். சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம்புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தயாரிப்பாளர்-இயக்குநர் எம்.எஸ். மூர்த்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவில் சேவிலோ ராஜா ஒளிப்பதிவு, மீனாட்சி சுந்தரம் படத்தொகுப்பு, ஜெயமுருகன் கலை இயக்கம், ஸ்ரீதர் – ஆனந்த் நடன அமைப்பு, பயர் கார்த்திக் சண்டை அமைப்பு ஆகியவற்றை மேற்கொண்டுள்ளனர். மக்கள் தொடர்பு பணியை புவன் செல்வராஜ் மேற்கொள்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் எம். எஸ். மூர்த்தி கூறியதாவது:

“சென்னையில் உள்ள 99 வீடுகள் கொண்ட ஒரு குடியிருப்பில் நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்களையே இத்திரைப்படம் மையப்படுத்துகிறது. அந்த பகுதியில் பல்வேறு மர்மங்கள் நடப்பதற்கான காரணத்தை சபரி, ரக்சிதா, ஸ்வேதா மற்றும் நான் நடித்துள்ள கதாபாத்திரம் இணைந்து கண்டுபிடிக்க முயலும் பயணமே கதையின் மையம்.

மேலும், தமிழ் சினிமாவில் இதுவரை காணப்படாத புத்த பிக்குகளின் காட்சிகளை நாங்கள் நிஜ மடாலயங்களில் சென்று பிரம்மாண்டமாக பதிவு செய்துள்ளோம். அதோடு, AI-CG தொழில்நுட்பம் பயன்படுத்தி பல்வேறு காட்சிகள் மிகுந்த நவீனத் தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளன. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது,” என்றார்.