Thursday, April 23
Shadow

நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்துள்ள அகண்டா 2: தாண்டவம் திரைப்படம், வரும் டிசம்பர் 5ஆம் தேதி தமிழில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

‘காட் ஆஃப் மாஸஸ்’ நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் ‘அகண்டா 2: தாண்டவம்’ – சென்னை பத்திரிகையாளர் சந்திப்பு

நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்துள்ள அகண்டா 2: தாண்டவம் திரைப்படம், வரும் டிசம்பர் 5ஆம் தேதி தமிழில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு, படக்குழுவினர் இன்று சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.

 

நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன்

“ஹைதராபாத் விழாவில் இந்தப் படத்தின் பேனாவை பார்த்தவுடன், இது முழுக்க முழுக்க கூஸ்பம்ஸ் தரும் அனுபவம் என்பதை உணர்ந்தேன். என் டி.ஆர் அவர்களுடன் நடிக்காத ஏக்கம் இருந்தது; இந்தப் படத்தில் ‘காத்திரு கடவுள்’ ஆக அவருடன் இணைந்து நடித்தது என் அதிர்ஷ்டம்.

பாலைய்யா ஒரு நடிகர் மட்டும் அல்ல; அவர் ஒரு சக்தி. -10 டிகிரி குளிரில் எவ்வித CGI இல்லாமல் நடித்த அர்ப்பணிப்பை நேரில் பார்த்து வியந்தேன். தமிழில் ஏ.பி. நாகராஜ் மாதிரி படம் எடுக்கலாம் என்ற என் ஆசையை இயக்குநர் போயபாடி ஶ்ரீனு நிறைவேற்றியுள்ளார்.

‘அகண்டா 2’ மொழி தாண்டி இந்திய கலாச்சாரத்தை கொண்டாடும் பான் இந்திய படைப்பு. எனது 300 படங்களில் இது தனித்துவமான அனுபவம். மக்கள் கண்டிப்பாக இந்தப் படத்தை விரும்புவார்கள்.” என்றார்.

 

நடிகை விஜி சந்திரசேகர்

“அகண்டா 2 குழுவை சென்னையில் வரவேற்கிறேன். இந்தப் படத்தில் எப்படி வந்தேன் எனக்கே தெரியவில்லை; இயக்குநர் போயபாடி ஶ்ரீனு என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி.

இந்தப் படத்தில் நடித்தது சிவனின் அருள் போல உணர்ந்தேன். நான் 2-3 காட்சிகளில் நடித்தாலும், பெரும் தாக்கத்துடன் காட்சிகளை அமைத்துள்ளார்.

பாலைய்யா சார் செருப்பில்லாமல் வெளியில் உழைத்த உழைப்பை பார்த்து என்னால் சொல்ல முடியவில்லை. தமன் இசை படத்தை உயர்த்தியுள்ளது. தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மற்றும் பாலைய்யா சாரை இணைத்து ஒரு படம் செய்ய வேண்டும். ‘அகண்டா 3’யும் செய்ய வேண்டும்.” என்றார்.

இணை தயாரிப்பாளர் – கோடி பருச்சுரி

“தமிழக பத்திரிக்கை நண்பர்களின் அன்புக்கு நன்றி. இது உண்மையான பான் இந்திய படைப்பு. அனைவரும் கொண்டாடக்கூடிய படமாக இருக்கும். இயக்குநருக்கும் நடிகர்களுக்கும் நன்றி.” என்று கூறினார்.

 

இயக்குநர் போயபாடி ஶ்ரீனு

“அகண்டா என்பது ஒரு மொழிக்கான படம் அல்ல; இந்தியாவின் ஆன்மாவையும், ஆன்மிகத்தையும் கொண்டாடும் படைப்பு. அதன் தொடர்ச்சியாக ‘அகண்டா 2’ உருவாகியுள்ளது. இது தெலுங்கு–தமிழ் மட்டுமல்ல; பாரதத்தின் ஒவ்வொரு பகுதியும் கொண்டாடக்கூடிய படம்.

‘தேசம், தேகம், தெய்வம்’ — மூன்றையும் இணைக்கும் கதை. அதை பெரிய அளவில் கமர்ஷியலாக வழங்கியுள்ளோம். அனைவரும் ரசிப்பீர்கள்.” என்றார்.

 

நந்தமூரி பாலகிருஷ்ணா

“சென்னைக்கு வருவது என் வீட்டுக்கு வருவது போல. நான் பிறந்த மண் இதுதான். தமிழ் ரசிகர்களின் அன்பு என் உயிருக்கு இணையானது. என் அப்பா என்.டி.ஆர் அவர்கள் தமிழ் நாட்டை அளவில்லா பாசத்துடன் நேசித்தவர்.

‘அகண்டா’ முதல் பாகம் வெற்றி பெற்ற பிறகு, இப்படங்களுக்கான ரசிகர் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இயக்குநர் ஶ்ரீனுவுடன் எனது நான்காவது படம் இது; அனைத்தும் சூப்பர் ஹிட்.

இந்தப் படம் சீக்குவல் அல்ல; இந்து தர்மத்தையும் இந்திய கலாச்சாரத்தையும் போற்றும் படைப்பு. சனாதன தர்மத்தின் சக்தியை இந்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் படமாக இது அமைகிறது.

நான் திரையில் 50 வருடமாக நடிக்கிறேன்; ரசிகர்களின் அன்பு என்னை இன்றும் ஹீரோவாக நிறுத்துகிறது. டிசம்பர் 5ஆம் தேதி இந்தப் படம் வெளியாகிறது — அனைவரும் கண்டிப்பாக பாருங்கள்.” என கூறினார்.

படம் குறித்து

ராம் ஆச்சம்டா மற்றும் கோபிசந்த் ஆச்சம்டா இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், 14 ரீல்ஸ் ப்ளஸ் பேனர் மூலம், M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகின்றார்.

ஆதிப் பினிசெட்டி வலுவான வில்லனாக; சம்யுக்தா நாயகியாக; ஹர்ஷாலி மால்ஹோத்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர்கள் C. ராம்பிரசாத் மற்றும் சந்தோஷ் D டெடாகே பெரும் பிரம்மாண்டத்துடன் காட்சிகளை உருவாக்கியுள்ளனர். தமன் S–இன் பின்னணி இசை படத்திற்கு தெய்வீகத் தாளத்தை அளிக்கிறது. தம்மிராஜுவின் எடிட்டிங், A.S. பிரகாஷின் கலை வடிவமைப்பு ஆகியவை தொழில்நுட்ப ரீதியாக படத்தை மேலும் உயர்த்துகின்றன.

‘அகண்டா 2 – தாண்டவம்’ டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.