
திரு வீர் – ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி இணையும் கங்கா எண்டர்டெயின்மென்ட்ஸ் “புரொடக்ஷன் நம்பர் 2”க்கு “ஓ…! சுகுமாரி” என தலைப்பு அறிவிப்பு!
சமீபத்தில் “ப்ரீ வெட்டிங் ஷோ” திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில், அதே படத்தின் நாயகன் திரு வீர் மற்றும் “சம்கிராந்திகி வஸ்துன்னாம்” படத்தில் சிறப்பான நடிப்புக்குப் பாராட்டுகள் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய ஃபேமிலி எண்டர்டெயினர் படம் தயாராகிறது.
இந்தப் படத்தை இயக்குநர் பரத் தர்ஷன் இயக்க, கங்கா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வர ரெட்டி மூலி தயாரிக்கிறார். “சிவம் பஜே” படத்திற்குப் பின்னர், இந்த நிறுவனத்தின் இரண்டாவது படமாக “புரொடக்ஷன் நம்பர் 2” உருவாகிறது.
இன்று அதிகாரப்பூர்வமாக “ஓ…! சுகுமாரி” என தலைப்பு வெளியிடப்பட்டது. நீல நிற இதயம், அதை இரண்டாகப் பிளக்கும் ஆரஞ்சு மின்னல், பின்னணியில் ஆலமரம், கிராமச் சூழல், ஓடுவரும் கிராமவாசிகள் ஆகியவை இடம்பெற்றுள்ள டைட்டில் போஸ்டர் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இது காதல், உணர்ச்சி மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய கதையைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
படக்குழுவில் இணைந்துள்ள தொழில்நுட்ப கலைஞர்கள்:
ஒளிப்பதிவு – C. H. குஷேந்தர் (ரசாகர், பொலிமேரா புகழ்)
இசையமைப்பு – பரத் மஞ்சிராஜு (M. M. கீரவாணியின் நெருங்கிய துணை இசையமைப்பாளர்)
கலை இயக்குநர் – திருமாலா M. திருப்பதி (பலகம் புகழ்)
எடிட்டர் – ஸ்ரீ வரபிரசாத் (கா படம்)
உடை வடிவமைப்பு – அனு ரெட்டி அக்கட்டி (ஸ்வயம்பு)
பாடலாசிரியர் – பூர்ணசாரி
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங் – ஹேஷ்டேக் மீடியா
நடிகர்கள்:
திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜான்சி, விஷ்ணு ஓ லட்டு, ஆமணி, முரளிதர் கவுட், ஆனந்த், அஞ்சிமாமா, சிவானந்த், கோட்டா ஜெயராம், கவிரெட்டி ஸ்ரீனிவாஸ், சரண்யா.
படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

Thiru Veer, Aishwarya Rajesh, Bharat Dharshan, Maheswara Reddy Mooli, Gangaa Entertainments Production No 2 Titled Oh..! Sukumari, Title Poster Is Eye-Catching
Young hero Thiru Veer, and talented actress Aishwarya Rajesh who delivered blockbusters with their respective movies Pre Wedding Show and Sankranthiki Vasthunnam, are working together playing the main leads in the upcoming wholesome family entertainer being directed by debutant Bharat Dharshan and produced by Maheswara Reddy Mooli under Gangaa Entertainments, following the banner’s critically acclaimed first production, Shivam Bhaje.
Today, the makers unveiled the film’s title- Oh..! Sukumari. The makers unveiled an eye-catching title poster that immediately caught attention. It features a blue heart symbol divided by a striking orange lightning bolt, set against a banyan tree in a rural backdrop with villagers running in the background- hinting at emotional turbulence, romance, and unexpected twists in the story.
