
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் TR – ‘அரசன்’ அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தீவிரம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தகவலை நடிகர் சிலம்பரசன் TR தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பிரத்யேக புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் சிலம்பரசன் TR உடன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஜெர்மியா, சமுத்திரக்கனி, விக்ராந்த், கிஷோர், சைத்ரா ஜே. ஆச்சார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் கிரைம் கலந்த ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அண்மையில் மதுரையில் நிறைவடைந்தது. அந்த கட்டத்தில் சிலம்பரசன் TR “மதுரை டைகர்” என்ற கதாபாத்திரத்தில் கபடி வீரராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து தற்போது சென்னை டி.நகர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும், வெற்றிமாறன் உருவாக்கி வரும் ‘வடசென்னை’ சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாகவும் ‘அரசன்’ உருவாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, ‘பொல்லாதவன்’ திரைப்படத்திற்கு முன்பே இயக்குநர் வெற்றிமாறன் எழுதி முடித்த கதையாக ‘அரசன்’ கூறப்படுகிறது. இதனால் இந்த படத்திற்கான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதால், இந்த ஆண்டின் இறுதிக்குள் ‘அரசன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Schedule of Silambarasan TR–Vetrimaaran’s ‘Arasan’ Progresses Rapidly in Chennai
The next schedule of the film ‘Arasan’, starring leading Tamil actor Silambarasan TR and directed by Vetrimaaran, is currently progressing briskly in Chennai.
Silambarasan TR shared this update on his social media page along with an exclusive photo from the sets, which has created excitement among fans and increased anticipation for the film.
The film features an ensemble cast including Vijay Sethupathi, Andrea Jeremiah, Samuthirakani, Vikranth, Kishore, and Chaithra J. Achar in prominent roles alongside Silambarasan TR. The movie is being made as a crime action thriller with music composed by Anirudh. It is produced by Kalaipuli S. Thanu under the banner of V Creations.
The first schedule of the film was recently completed in Madurai. During that phase, Silambarasan TR reportedly appeared in the role of “Madurai Tiger,” playing a kabaddi player.

Following this, the next phase of shooting has now begun in Chennai’s T. Nagar and surrounding areas. Reports also suggest that ‘Arasan’ is being developed as part of Vetrimaaran’s “Vada Chennai” cinematic universe, making it a notable project.
Interestingly, the story of ‘Arasan’ is said to have been written by Vetrimaaran even before his film ‘Polladhavan’. With shooting progressing steadily, the makers are planning the schedule in such a way that the film could hit theatres by the end of this year.
