Sunday, May 24
Shadow

“கடனில் மூழ்கிய நகர வாழ்க்கை… ‘கிங்’ ஆக களமிறங்கும் அர்ஜூன் தாஸ்!”

“கடனில் மூழ்கிய நகர வாழ்க்கை… ‘கிங்’ ஆக களமிறங்கும் அர்ஜூன் தாஸ்!”

“கான் சிட்டி” படத்தின் இரண்டாவது பாடல் ‘நான் தான் கிங்கு’ ரசிகர்களை கவரும் மாஸ் ஆன்தம்!

நகர வாழ்க்கையின் அழுத்தம், கடன் சுமை, குடும்ப பொறுப்புகள்—இவற்றுக்கு நடுவில் தன்னம்பிக்கையோடு வாழும் ஒரு இளைஞனின் ஸ்டைலிஷ் அடையாளமாக மாறியுள்ளது “கான் சிட்டி” திரைப்படத்தின் புதிய பாடல் “நான் தான் கிங்கு”. சமீபத்தில் வெளியான இந்த லிரிக்கல் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகும் “கான் சிட்டி” திரைப்படம் ஆரம்பத்திலிருந்தே தனித்துவமான அப்டேட்களால் கவனம் ஈர்த்து வருகிறது. ஏற்கனவே வெளியான “ரா ரா ரங்கையா” பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள “நான் தான் கிங்கு” பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் உயர்த்தியுள்ளது.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் அதிரடியான இசையிலும், மோகன் ராஜனின் துள்ளலான வரிகளிலும் உருவாகியுள்ள இந்த பாடலை ஷான் ரோல்டன், கெலிதீ மற்றும் லலிதா சுதா இணைந்து பாடியுள்ளனர். முதல் முறை கேட்கும்போதே மனதில் பதியும் ட்யூன், அதிரடி பீட்ஸ், கெத்து நிறைந்த வரிகள் ஆகியவை பாடலுக்கு தனி மெருகூட்டுகின்றன.

குறிப்பாக அர்ஜூன் தாஸ் திரையில் காட்டும் ஸ்டைல் மற்றும் ஸ்கிரீன் பிரசென்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. “நான் தான் கிங்கு” என்ற வரியே தற்போது இளைஞர்களிடையே ஒரு புதிய மாஸ் டயலாக் போல பரவி வருகிறது. பாடலின் ஒவ்வொரு ஷாட்டிலும் நகர வாழ்க்கையின் ரஃப் & டஃப் உணர்வை வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

“கான் சிட்டி” திரைப்படம் வெறும் மாஸ் எண்டர்டெய்னர் அல்ல; நகரங்களில் வாழும் மிடில் கிளாஸ் குடும்பங்கள் சந்திக்கும் கடன் பிரச்சனைகள், வாழ்க்கை போராட்டங்கள், குடும்ப பாசம், நகைச்சுவை மற்றும் பரபரப்பை கலந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி வருகிறது.

படத்தில் அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடித்திருக்க, மலையாள சினிமாவில் கவனம் பெற்ற அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சென்னை, மங்களூர், மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியிருப்பதும் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு அப்டேட்டிலும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வரும் “கான் சிட்டி”, தற்போது “நான் தான் கிங்கு” பாடல் மூலம் இளைஞர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்துள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

 

“A Man Buried in Debt… Arjun Das Steps Up as the ‘King’ of the City!”

“Kaan City” Second Single “Naan Thaan Kingu” Emerges as a Stylish Mass Anthem!

The newly released second single “Naan Thaan Kingu” from Kaan City has struck a chord with audiences, turning into a viral sensation across social media platforms. More than just a song, it stands as a stylish anthem celebrating confidence, survival, and swagger amidst the chaos of urban life, debt, and responsibilities.

Produced by Powerhouse Pictures and directed by debut filmmaker Harish Durairaj, Kaan City has been steadily building strong buzz with every update. Following the success of the first single “Ra Ra Rangayya,” which gained impressive traction online, the makers have now unveiled “Naan Thaan Kingu,” further elevating anticipation for the film.

Composed by Sean Roldan, with energetic lyrics penned by Mohan Rajan, the song has been sung by Sean Roldan, Kelithee, and Lalitha Sudha. The catchy tune, pulsating beats, and attitude-filled lyrics make the track instantly appealing from the very first listen.

One of the biggest highlights of the lyrical video is Arjun Das’ commanding screen presence and effortless style. His portrayal in the song has resonated strongly with youngsters, with the phrase “Naan Thaan Kingu” already becoming a trending expression among fans online. The visuals effectively capture the raw, edgy essence of modern city life, adding a gritty flavor to the song.

However, Kaan City is not just a mass entertainer. The film reportedly revolves around the struggles of a middle-class family trapped in financial debt while balancing emotions, relationships, humor, and intense moments — making it a complete family entertainer with a realistic urban backdrop.

The film stars Arjun Das in the lead role alongside acclaimed actress Anna Ben as the female lead. Popular actors Yogi Babu, Vadivukkarasi, and Akilan also play significant roles in the film.

Shot across multiple locations including Chennai, Mangaluru, and Mumbai, Kaan City has already grabbed industry attention, especially after Netflix reportedly acquired the film’s digital streaming rights for a substantial amount.

With every promotional update creating curiosity among audiences, Kaan City continues to strengthen its pre-release momentum. The latest track “Naan Thaan Kingu” has now added a fresh wave of excitement, leaving fans eagerly waiting for the film’s theatrical release.