
ஹீரோவிலிருந்து இயக்குநராக… ராம் போதினேனியின் அடுத்த லெவல் ஆட்டம் ஆரம்பம்!
தெலுங்கு சினிமாவில் எப்போதும் எனர்ஜி, ஸ்டைல், மாஸ் என ரசிகர்களை கவர்ந்து வரும் , இப்போது தனது திரைப்பயணத்தில் மிகப் பெரிய திருப்பத்தை எடுத்துள்ளார். இதுவரை நடிகராக மட்டுமே ரசிகர்களை கவர்ந்த அவர், தற்போது முதல் முறையாக இயக்குநராக களமிறங்குகிறார். அவரது 23வது படம் #RAPO23 மூலம் இந்த புதிய அவதாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக கதாபாத்திர தேர்வில் வித்தியாசம் காட்டி வரும் ராம், கடந்த படத்தில் பாடலாசிரியராகவும், பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருந்தார். அந்த முயற்சிகளுக்கு கிடைத்த வரவேற்பே, தற்போது அவரை இயக்குநர் நாற்காலிக்குக் கொண்டு வந்துள்ளதாக திரையுலகில் பேசப்படுகிறது.
பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிடப்பட்டுள்ள #RAPO23 போஸ்டர், வழக்கமான ஹீரோ அறிமுக போஸ்டரை விட முற்றிலும் மாறுபட்ட மனநிலையை உருவாக்கியுள்ளது. “வீரா” என்ற கதாபாத்திரத்தில் ராம் தோன்றும் இந்த லுக், டார்க் மற்றும் சைக்கலாஜிக்கல் உலகத்தை சுட்டிக்காட்டுகிறது. லெதர் ஜாக்கெட், V-cut ஹேர் ஸ்டைல், பின்னணியில் சிவப்பு நிற “V” சின்னம் — இவை அனைத்தும் சேர்ந்து ஒரு ரகசியமான, ஆபத்தான மனிதரின் மனநிலையை வெளிப்படுத்துகின்றன.
குறிப்பாக “The Story of a Lone Wolf” என்ற டேக் லைன், இது சாதாரண ஆக்ஷன் படம் அல்ல என்பதற்கான பெரிய சைகையை கொடுக்கிறது. தனிமை, மன அழுத்தம், உளவியல் மோதல்கள் மற்றும் நகர பின்னணியில் நகரும் கதைக்களம் என படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.
இப்படத்தை, புதிதாக தொடங்கப்பட்டுள்ள Rapo Cinematics நிறுவனம் சார்பில் கிருஷ்ணா போதினேனி தயாரிக்கிறார். மேலும், நடிகராக இருந்து இயக்குநராக மாறிய NTR, கிருஷ்ணா, பவன் கல்யாண் போன்றவர்களின் பட்டியலில் தற்போது ராம் போதினேனியும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், இந்த ஆண்டின் டிசம்பரில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாஸ் ஹீரோவாக இருந்த ராம், இப்போது தனது கற்பனையையும் கையொப்பத்தையும் திரையில் எப்படி வெளிப்படுத்தப் போகிறார் என்பது தான் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

From Hero to Director… Ram Pothineni’s Next-Level Game Begins!
, who has consistently impressed Telugu cinema audiences with his energy, style, and mass appeal, has now taken a major turn in his cinematic journey. After winning hearts as an actor, he is now stepping into filmmaking for the very first time. His directorial debut has officially been announced through his 23rd film, #RAPO23.
Over the last few years, Ram has been experimenting with his creative side beyond acting. In his previous project, he surprised fans by turning lyricist and playback singer, earning appreciation for both efforts. Industry circles believe those successful experiments have now inspired him to take the big leap into direction.
Released as a birthday special, the first-look poster of #RAPO23 creates a completely different mood from a typical hero-introduction poster. Ram appears as “Veera,” a character that seems to belong to a dark and psychological world. The leather jacket, sharp V-cut hairstyle, and the massive red “V” in the background together establish the image of a mysterious and dangerous personality.
More importantly, the tagline “The Story of a Lone Wolf” strongly hints that this will not be a regular commercial action entertainer. Themes of isolation, psychological conflict, emotional intensity, and a crime-ridden urban backdrop suggest that the film could offer a fresh and intense cinematic experience.
The film is being produced by Krishna Pothineni under the newly launched Rapo Cinematics banner. With this move, Ram Pothineni now joins the league of actor-directors like , , and , making the project even more exciting for fans.
The regular shoot is expected to begin in June, while the makers are targeting a December release this year. Details regarding the rest of the cast and technical crew are expected to be announced soon.
Having already established himself as a mass entertainer, all eyes are now on how Ram Pothineni will present his imagination and storytelling vision on screen as a director.
