Monday, May 25
Shadow

அம்மாவின் முகத்தில் மறைந்திருக்கும் மர்மம்… இரட்டை குழந்தைகளின் பயங்கர பயணம்!” ஜூன் 5ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் சைக்கலாஜிகல் ஹாரர் திரில்லர் “இரட்டையர்”

“அம்மாவின் முகத்தில் மறைந்திருக்கும் மர்மம்… இரட்டை குழந்தைகளின் பயங்கர பயணம்!”

ஜூன் 5ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் சைக்கலாஜிகல் ஹாரர் திரில்லர் “இரட்டையர்”

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வகை திரில்லர் படங்கள் வெளியாகி வரும் நிலையில், குடும்ப பாசத்தையும் மனநிலைக் கலக்கத்தையும் திகில் கலந்த திரைக்கதையுடன் இணைத்து புதிய அனுபவத்தை தரவிருக்கிறது “இரட்டையர்”.

Asia Iconic Studios நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர்களாக ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன் மற்றும் வினோத் கண்ணன் இணைந்துள்ள நிலையில், ஹரிஹரன் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி சிவானி ஸ்டுடியோஸ் மூலம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பொதுவாக ஹாரர் அல்லது திரில்லர் படங்களில் பேய், கொலை அல்லது விசாரணை போன்ற அம்சங்களே மையமாக இருக்கும். ஆனால் “இரட்டையர்” திரைப்படம், ஒரு தாயும் அவரது இரட்டை பெண் குழந்தைகளும் இடையே உருவாகும் உளவியல் ரீதியான அச்ச உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது படத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

கதையின் மையத்தில், ஒரு விபத்தில் தந்தையை இழக்கும் குடும்பம். அதே விபத்தில் தாயின் முகமும் கடுமையாக சேதமடைகிறது. பிளாஸ்டிக் சர்ஜரிக்குப் பிறகு வீடு திரும்பும் தாயின் நடத்தை முற்றிலும் மாறிப்போகிறது. ஆரம்பத்தில் குழப்பமாக தோன்றும் அந்த மாற்றங்கள், பின்னர் இரட்டை குழந்தைகளின் வாழ்வையே அச்சத்தில் ஆழ்த்துகின்றன. உண்மையில் அந்த தாயின் பின்னால் என்ன மர்மம் இருக்கிறது? குழந்தைகள் எதிர்கொள்ளும் பயங்கர அனுபவங்கள் என்ன? என்பதே படத்தின் சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதை.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர் வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக இருட்டும் பதட்டமும் கலந்த காட்சிகள், தாயின் மர்மமான முகபாவனைகள் மற்றும் குழந்தைகளின் பயம் கலந்த நடிப்பு ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.

இப்படத்தில் அபிநயா தாயாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரட்டை குழந்தைகளாக அனுமிதா மற்றும் அனுஷிதா நடித்துள்ளனர். மேலும் சுப்ரமணிய சிவா மற்றும் சங்கீதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திட்டக்குடி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் வெறும் 21 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மனநிலையை உலுக்கும் சஸ்பென்ஸ், குடும்ப உறவுகளின் இருண்ட பக்கம் மற்றும் திகில் கலந்த திரைக்கதை ஆகியவற்றின் சங்கமமாக உருவாகியுள்ள “இரட்டையர்”, இந்த ஜூன் மாதத்தில் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்கு அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பக் குழு:

கதை, திரைக்கதை & இயக்கம் – ஜெகதீஷ்
தயாரிப்பாளர்கள் – ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன், வினோத் கண்ணன்
வசனம் – பால பாரதி
ஒளிப்பதிவு – முகமது அமீன்
இசை – GKV
படத்தொகுப்பு – ஈஸ்வரா மூர்த்தி
கலை இயக்கம் – பிரபாகரன் ராகுல்
நிர்வாக தயாரிப்பாளர் – பாலச்சந்தர்
தயாரிப்பு மேலாளர் – பிரதீப் மிதுல்
இணை தயாரிப்பாளர் – ஹரிஹரன்
மக்கள் தொடர்பு – மணி மதன்

“A Mother’s Face Hides a Terrifying Mystery… The Nightmare Journey of Twin Daughters!”

Psychological Horror Thriller “Irattaiyar” Set for Worldwide Release on June 5

At a time when Tamil cinema continues to explore different shades of thrillers, “Irattaiyar” promises to deliver a unique cinematic experience by blending family emotions, psychological fear, and intense horror elements.

Produced by Asia Iconic Studios, the film marks the directorial debut of Jagadeesh. The movie is jointly produced by Rajeswari Lakshminarayanan and Vinoth Kannan, with Hariharan serving as co-producer. “Irattaiyar” is slated for a worldwide theatrical release on June 5 through Shivani Studios.

Unlike conventional horror thrillers that revolve around ghosts, murders, or investigations, “Irattaiyar” takes a completely different route by focusing on the psychological fear and emotional bond between a mother and her twin daughters. This fresh narrative approach has already generated strong curiosity among movie lovers.

The story revolves around a family shattered by a tragic accident in which the father loses his life, while the mother suffers severe facial injuries. After undergoing plastic surgery, she returns home — but her behavior begins to change in disturbing ways. What initially appears unusual soon turns terrifying, deeply affecting the lives of her twin daughters. What is the mystery hidden behind the mother’s transformation? What horrifying experiences await the children? These questions form the gripping core of the film’s suspense-driven screenplay.

Ever since the release of the first-look poster and trailer, the film has been creating buzz among audiences. The dark visuals, tension-filled atmosphere, the mother’s eerie expressions, and the emotionally intense performances of the twin girls have particularly caught viewers’ attention.

Actress Abhinaya plays the mother in a strikingly different role, while Anumitha and Anushitha portray the twin daughters. The cast also includes Subramania Siva and Sangeetha in pivotal roles.

The film was shot entirely in just 21 days across Thittakudi and Kodaikanal, and is currently in its final stages of post-production.

With a combination of psychological suspense, emotional depth, and spine-chilling horror, “Irattaiyar” is expected to offer audiences a fresh and intense theatrical experience this June.

Technical Crew:

Story, Screenplay & Direction – Jagadeesh
Producers – Rajeswari Lakshminarayanan, Vinoth Kannan
Dialogues – Bala Bharathi
Cinematography – Mohamed Ameen
Music – GKV
Editing – Easwara Moorthy
Art Direction – Prabhakaran Rahul
Executive Producer – Balachander
Production Manager – Pradeep Mithul
Co-Producer – Hariharan
PRO – Mani Madhan