
விஷாலின் இரட்டை சாதனைக்கு சாட்சியாக ‘மகுடம்’ டீசர்… சூப்பர் குட் பிலிம்ஸின் 99வது படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!
தமிழ் திரையுலகில் நடிகராக தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள விஷால், தற்போது இயக்குநராகவும் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். அவர் எழுதி இயக்கி நடித்துள்ள ‘மகுடம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘மகுடம்’ திரைப்படம் பல்வேறு காரணங்களால் கவனம் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சூப்பர் குட் பிலிம்ஸின் 99வது படமாக உருவாகியுள்ளதுடன், விஷாலின் திரைப்பயணத்தில் 35வது படமாகவும் இது அமைந்துள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள டீசர், ஆக்சன், காதல், உணர்ச்சி மற்றும் பரபரப்பான திரைக்கதை அம்சங்களை ஒருங்கிணைத்த படைப்பாக ‘மகுடம்’ உருவாகியிருப்பதை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக இயக்குநராக விஷால் கையாண்டுள்ள காட்சியமைப்புகளும், அவரது திரைமொழியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்தப் படத்தில் விஷாலுடன் அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஜெயபிரகாஷ், அஜய், வம்சி கிருஷ்ணா, அபு சலீம், அர்ஜெய், விஜே ஜான்சி, பதம் குமார் மற்றும் சபுமோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ஒளிப்பதிவாளர்கள் ரிச்சர்ட் எம். நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் இணைந்து காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளனர். அதிரடி காட்சிகளை திலீப் சுப்பராயன் வடிவமைத்துள்ளார்.
மறக்க முடியாத தயாரிப்பாளரான ஆர்.பி. சவுத்ரியின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மகுடம்’, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ‘Makutam’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. ஜூலை மாத வெளியீட்டை நோக்கி முன்னேறி வரும் இப்படம், டீசர் வெளியீட்டின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
இயக்குநராகவும் நடிகராகவும் விஷால் மேற்கொண்டுள்ள இந்த புதிய முயற்சி, அவரது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமையும் என்ற நம்பிக்கையை ‘மகுடம்’ டீசர் ஏற்படுத்தியுள்ளது.
Vishal’s Double Milestone Gains Momentum as Magudam Teaser Creates Buzz
Actor Vishal, who has carved a distinct place for himself in Tamil cinema, is all set to begin a new chapter in his career as a filmmaker. The teaser of Magudam, written, directed, and headlined by Vishal, has been released and is receiving a positive response from audiences.
The film has attracted attention for several reasons. Apart from marking Vishal’s 35th film as an actor, Magudam also stands as the 99th production of the prestigious Super Good Films banner, making it a significant project for both the actor and the production house.
The recently released teaser offers a glimpse into a compelling cinematic experience packed with action, romance, emotions, and an engaging narrative. Vishal’s vision as a director, coupled with his screen presence as the lead actor, has generated considerable excitement among movie lovers.
The film features an ensemble cast including Anjali, Dushara Vijayan, John Vijay, Jayaprakash, Ajay, Vamsi Krishna, Abu Salim, Arjai, VJ Janani, Padam Kumar, and Sabumon in pivotal roles.
Adding strength to the film is the music composed by G. V. Prakash Kumar. Cinematographers Richard M. Nathan and Abinandhan Ramanujam have brought the visuals to life, while action sequences have been choreographed by renowned stunt director Dileep Subbarayan.
Produced under the banner of Super Good Films by the late legendary producer R. B. Choudary’s esteemed production house, Magudam is also set to release in Telugu under the title Makutam. Scheduled for a July release, the film has already heightened expectations among fans through its impactful teaser.
With Vishal taking on the dual responsibilities of actor and director, Magudam is being viewed as an important milestone in his cinematic journey, and the teaser has successfully sparked anticipation for what promises to be an exciting theatrical experience. :::
