நடிகராக மட்டுமல்ல… இயக்குநராகவும் புதிய அத்தியாயம் தொடங்கும் விஷால் – ஆகஸ்ட் 14-ல் வெளியாகும் ‘மகுடம்’!
நடிகராக மட்டுமல்ல… இயக்குநராகவும் புதிய அத்தியாயம் தொடங்கும் விஷால் – ஆகஸ்ட் 14-ல் வெளியாகும் ‘மகுடம்’!
35 ஆண்டுகால கனவுக்கு பிறகு… இயக்குநர் விஷாலின் முதல் படமாக உருவாகியிருக்கும் ‘மகுடம்’
தமிழ் திரையுலகில் நடிகராக தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் விஷால், தற்போது தனது திரைப்பயணத்தில் மற்றுமொரு முக்கியமான அத்தியாயத்தை தொடங்குகிறார். நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படமான ‘மகுடம்’, வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிப்பில் மட்டுமல்லாமல், திரைப்படத்தின் உருவாக்கத்திலும் தனது பார்வையை வெளிப்படுத்த வேண்டும் என்ற விஷாலின் நீண்ட நாள் கனவின் வெளிப்பாடாக ‘மகுடம்’ உருவாகியுள்ளது. ஒரு நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள விஷால், தற்போது இயக்குநர் பொறுப்பையும் ஏற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ம...


