
11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி… நிவின் பாலியின் 50-வது படமாக உருவாகும் ‘விஜயம்’!
மலையாளத் திரையுலகில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட நடிகர் நிவின் பாலி – இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கூட்டணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது. ‘நேரம்’, ‘பிரேமம்’ ஆகிய வெற்றிப் படங்களின் மூலம் தனித்துவமான இடத்தைப் பெற்ற இந்த கூட்டணி, தற்போது ‘விஜயம்’ என்ற புதிய திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை மீண்டும் சந்திக்கத் தயாராகியுள்ளது.
11 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் இந்தப் படம், நிவின் பாலியின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ள அவரது 50-ஆவது திரைப்படமாகும். இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே அதிகரித்துள்ளது.
‘விஜயம்’ திரைப்படத்தின் தலைப்பு மற்றும் அறிமுக வீடியோ, எர்ணாகுளம் பத்மா திரையரங்கில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது. தலைப்பு அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரேசிங் உலகத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை அல்போன்ஸ் புத்திரன் ஏற்றுள்ளார். அவரது முந்தைய படங்களைப் போலவே, இந்தப் படமும் வித்தியாசமான திரைக்கதை மற்றும் காட்சியமைப்புடன் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலி ஜூனியர் பிக்சர்ஸ் மற்றும் சினிஹோலிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை டன்சன் டோனி மற்றும் சுனில் ராமடி தயாரிக்கின்றனர். நிர்வாகத் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு பணிகளை குட்டு சிவானந்தன் மேற்கொள்கிறார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளராக கேரளாவைச் சேர்ந்த ஸ்டீவ் கோட்டூர் இணைந்துள்ளார். சர்வதேச படைப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், ‘விஜயம்’ திரைப்படத்திற்கு பின்னணி இசையமைக்கிறார்.
நிவின் பாலியின் 50-ஆவது படம் என்பதாலும், அல்போன்ஸ் புத்திரனுடன் மீண்டும் இணைந்திருப்பதாலும், ‘விஜயம்’ திரைப்படம் மலையாளத் திரையுலகின் முக்கிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Nivin Pauly and Alphonse Puthren Reunite After 11 Years; 50th Film Titled ‘Vijayam’ Unveiled
The much-awaited reunion of actor Nivin Pauly and filmmaker Alphonse Puthren has finally become a reality. After delivering blockbuster hits like Neram and Premam, the celebrated duo has joined hands once again for a new film titled Vijayam.
Marking a significant milestone in Nivin Pauly’s career, Vijayam will be his 50th feature film. The project has already generated immense excitement among fans, making it one of the most anticipated Malayalam films in recent times.
The film’s title and announcement video were officially launched at a grand event held at Padma Theatre in Ernakulam in the presence of fans, media representatives, and members of the film industry. Within hours of its release, the announcement video began trending across social media platforms, receiving an overwhelmingly positive response.
Set against the backdrop of the world of racing, Vijayam promises a fresh cinematic experience. Alphonse Puthren has written the story, directed the film, and is also handling the editing, continuing his signature style of storytelling.
The film is jointly produced by Denson Tony and Sunil Ramadi under the Cineholics banner, in association with Pauly Jr. Pictures. Kuttu Sivanandan serves as the executive producer and creative designer for the project.
Music for the film will be composed by Kerala-based Steve Kottur, who is known for his work on Durandhar, Durandhar 2, and Aryan Khan’s Bards of Bollywood. He will be creating the film’s background score.
With the successful Nivin Pauly–Alphonse Puthren collaboration returning after more than a decade and the project marking the actor’s landmark 50th film, Vijayam has already emerged as one of the most eagerly awaited releases in Malayalam cinema. Details about the rest of the cast and technical crew are expected to be announced soon.
