
திரை கொண்டாட்டத்தைத் தாண்டி சமூகப் பொறுப்பு: 3 லட்சம் மாணவிகளுக்கு HPV விழிப்புணர்வு ஏற்படுத்திய அல்லு அர்ஜுன் ரசிகர்கள்!
சினிமா நட்சத்திரங்களை கொண்டாடுவது மட்டுமே ரசிகர் மன்றங்களின் பணியல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் நாடு தழுவிய அளவில் முன்னெடுத்துள்ள சமூக விழிப்புணர்வு முயற்சி கவனம் பெற்றுள்ளது.
இந்தியாவின் 8 மாநிலங்களில் உள்ள 820 பள்ளிகளில் HPV (Human Papillomavirus) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, சுமார் 3 லட்சம் மாணவிகளிடம் முக்கியமான சுகாதார விழிப்புணர்வு தகவல்களை கொண்டு சென்றுள்ளனர் அல்லு அர்ஜுன் ரசிகர்கள்.
அல்லு அர்ஜுன் ஃபேன்ஸ் அசோசியேஷன் (AAFA) சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த சமூக நல முயற்சி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், HPV வைரஸ் குறித்த அடிப்படை தகவல்கள், அதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் HPV தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், உடல்நலம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தேவைகளுக்காக தகுதியான மருத்துவ மற்றும் சுகாதார நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வேண்டிய அவசியம் குறித்தும் மாணவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொதுவாக திரைப்பட வெளியீடுகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் ரசிகர் சந்திப்புகள் என மட்டுப்படுத்தப்படும் ரசிகர் மன்ற செயல்பாடுகளைத் தாண்டி, சமூகத்திற்கு பயனளிக்கும் ஒரு தேசிய அளவிலான முயற்சியாக இந்த இயக்கம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பல மாநிலங்களில் பரந்து விரிந்துள்ள ரசிகர் அமைப்பின் வலையமைப்பை ஒருங்கிணைத்து, ஒரே நோக்கத்திற்காக 820 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி சுமார் 3 லட்சம் மாணவிகளை சென்றடைந்திருப்பது இந்த முயற்சியின் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
ஒரு திரை நட்சத்திரத்தின் ரசிகர்களாக தொடங்கிய பயணம், இன்று சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்புணர்வான இயக்கமாக வளர முடியும் என்பதற்கு இந்த முயற்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
HPV குறித்த உரையாடல்களை அதிகரிப்பது, தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய புரிதலை உருவாக்குவது மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை குடும்பங்களிடம் கொண்டு சேர்ப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திரையில் தங்கள் விருப்ப நட்சத்திரத்தை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், சமூகத்தின் எதிர்காலமான இளம் தலைமுறையின் நலனுக்காகவும் தங்களது ஒற்றுமையையும் ரசிகர் பலத்தையும் பயன்படுத்தி வரும் அல்லு அர்ஜுன் ரசிகர்களின் இந்த முயற்சி, நாடு முழுவதும் பாராட்டைப் பெற்று வருகிறது.
சினிமா ரசிகர் இயக்கங்களும் சரியான நோக்கத்துடன் செயல்பட்டால் சமூக மாற்றத்திற்கான சக்திவாய்ந்த தளமாக மாற முடியும் என்பதை அல்லு அர்ஜுன் ஃபேன்ஸ் அசோசியேஷனின் இந்த HPV விழிப்புணர்வு பிரச்சாரம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

Allu Arjun Fans Lead Nationwide HPV Awareness Campaign Across 820 Schools
Demonstrating that fan clubs can contribute to society beyond celebrating cinema stars, fans of ‘Icon Star’ Allu Arjun have undertaken a nationwide health awareness initiative.
The Allu Arjun Fans Association (AAFA) has conducted HPV (Human Papillomavirus) awareness programmes in 820 schools across eight Indian states, reaching nearly 300,000 female students with essential health information.
The initiative was carried out across Andhra Pradesh, Telangana, Tamil Nadu, Kerala, Karnataka, Maharashtra, Odisha and the Andaman and Nicobar Islands.
The school-based programmes provided students with information about HPV, preventive measures and the importance of HPV vaccination. Students and their families were also advised to consult qualified medical and healthcare professionals regarding health-related concerns and requirements.
The initiative extends beyond the conventional activities of fan clubs, which often focus on film releases, birthday celebrations and fan gatherings. Instead, it represents a coordinated nationwide effort aimed at promoting public health and social welfare.
By mobilising its fan network across multiple states and conducting 820 awareness programmes, the initiative reached nearly 300,000 female students, marking one of its most significant achievements.
What began as an initiative among film fans has developed into a socially responsible movement with the potential to contribute meaningfully to public awareness and social change.
The campaign seeks to encourage informed discussions about HPV, improve understanding of preventive measures and highlight the importance of vaccination among students and their families.
The initiative has received appreciation for demonstrating how fan communities can use their unity and collective strength not only to celebrate their favourite star but also to support the health and well-being of the younger generation.
The HPV awareness campaign by the Allu Arjun Fans Association further illustrates that cinema fan movements, when guided by a meaningful purpose, can serve as effective platforms for social change.
