
பிறந்தநாளில் கேமரா முன் நின்ற கமல்ஹாசன்! ‘சண்டியர்’ படப்பிடிப்பு தொடக்கம் – ரசிகர்களிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
சென்னை, நவம்பர் 7, 2026:
தனது பிறந்தநாளை புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புடன் தொடங்கியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படமான ‘சண்டியர்’ படத்தின் படப்பிடிப்பு இன்று (நவம்பர் 7) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. பிறந்தநாளில் படப்பிடிப்பு தொடங்கியிருப்பது இந்தப் படத்துக்கு கூடுதல் கவனத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வந்தது. குறிப்பாக, கமல்ஹாசனின் புதிய தோற்றம் தொடர்பான Look Test புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து படத்தின் மீதான ஆர்வம் மேலும் கூடியது. இதற்கிடையே, நேற்று (நவம்பர் 6) படத்தின் தலைப்பை ‘சண்டியர்’ எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தலைப்பு வெளியான அடுத்த நாளே படப்பிடிப்பும் தொடங்கியிருப்பது படத்தின் அடுத்தகட்ட நகர்வாக அமைந்துள்ளது.
தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும், புதிய முயற்சிகளையும் தேர்ந்தெடுத்து வரும் கமல்ஹாசனுடன், தனக்கென தனித்துவமான திரைக்கதை மற்றும் இயக்குநர் பாணியைக் கொண்ட எஸ்.யு. அருண்குமார் இணைந்திருப்பது இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. இருவரது கூட்டணியில் உருவாகும் ‘சண்டியர்’ படத்தின் கதை மற்றும் கமல்ஹாசனின் கதாபாத்திரம் குறித்த தகவல்களை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தொழில்நுட்பப் பணிகளிலும் கவனம் ஈர்க்கும் வகையில் அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் இணைந்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அன்பறிவ் சகோதரர்கள் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கின்றனர். கே.எஸ். சுனில் ஒளிப்பதிவையும், சி.எஸ். பாலச்சந்தர் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். அம்ரிதா ராம் ஆடை வடிவமைப்புப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
நவம்பர் 6-ம் தேதி தலைப்பை அறிவித்து, நவம்பர் 7-ம் தேதி படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கும் ‘சண்டியர்’, கமல்ஹாசனின் பிறந்தநாளில் தொடங்கியுள்ள புதிய சினிமாப் பயணமாக அமைந்துள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் கூடுதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

Kamal Haasan Begins ‘Sandiyar’ Shoot on His Birthday; Excitement Builds Around S. U. Arun Kumar Collaboration
Chennai, November 7, 2026:
Actor Kamal Haasan has marked his birthday with the beginning of a new cinematic journey. The much-anticipated film ‘Sandiyar’, directed by S. U. Arun Kumar and starring Kamal Haasan in the lead, officially went on floors today (November 7).
The project has been generating considerable curiosity among fans and film audiences over the past few days. The buzz intensified following the release of Kamal Haasan’s striking look-test photographs, which offered a glimpse of his appearance in the film. Adding to the excitement, the makers officially unveiled the film’s title, ‘Sandiyar’, yesterday (November 6), a day ahead of the actor’s birthday. The commencement of shooting today marks the next major development in the project.
The collaboration between Kamal Haasan and S. U. Arun Kumar is one of the key highlights of the film. While Kamal Haasan continues to explore diverse characters and innovative cinematic approaches, Arun Kumar has established a distinct identity through his unique storytelling and filmmaking style. Their coming together has naturally raised expectations, with audiences eager to know more about the film’s storyline and Kamal Haasan’s character.
The film also boasts an accomplished technical crew. Anirudh Ravichander is composing the music, while renowned action choreographers Anbariv will design the action sequences. K. S. Sunil is handling cinematography, C. S. Balachandar is serving as the production designer, and Amritha Ram is in charge of costume design.
‘Sandiyar’ is jointly produced by Kamal Haasan and R. Mahendran under the banners of Raajkamal Films International (RKFI) and Turmeric Media.
With its title announcement on November 6 followed by the commencement of production on November 7, ‘Sandiyar’ has begun its journey on a special note, coinciding with Kamal Haasan’s birthday.
Further announcements regarding the film’s cast and additional technical crew members are expected from the makers in the coming days.
