‘சேயோன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார் செந்தமிழன் சீமான்!
‘சேயோன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார் செந்தமிழன் சீமான்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘சேயோன்’ படக்குழுவில், இயக்குநர், நடிகர் மற்றும் அரசியல் இயக்கத் தலைவராகப் பன்முக அடையாளம் கொண்ட செந்தமிழன் திரு. சீமான் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
ஒவ்வொரு புதிய அறிவிப்பின் மூலமும் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்து வரும் ‘சேயோன்’ திரைப்படம் தற்போது மேலும் ஒரு முக்கியமான அறிவிப்பின் மூலம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. திரைப்பட இயக்குநராகவும், நடிகராகவும் தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ள செந்தமிழன் சீமான், இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.
தற்போது மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் சீமான் கலந்த...





