
61 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் சிவாஜியின் ‘திருவிளையாடல்’ – நவம்பர் 27-ல் உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ்!
தமிழ் சினிமாவின் காலத்தால் அழியாத காவியப் படைப்புகளில் ஒன்றான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘திருவிளையாடல்’ திரைப்படம், 61 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. வரும் நவம்பர் 27ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது.
அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில், திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் இசையமைப்பில் உருவான இப்படம், 1965ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முத்துராமன், டி.எஸ். பாலையா, நாகேஷ், ஏ.பி. நாகராஜன், சாவித்திரி, தேவிகா உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள் நடித்திருந்தனர். புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம், தனது வசனங்கள், நடிப்பு, இசை மற்றும் காட்சியமைப்புகளால் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.
குறிப்பாக, தருமியாக நாகேஷும், சிவபெருமானாக சிவாஜி கணேசனும் தோன்றும் காட்சியில் இடம்பெற்றுள்ள அனல் பறக்கும் வசனப் பரிமாற்றம் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை மற்றும் நடிப்புக் காட்சிகளில் ஒன்றாக இன்றும் கொண்டாடப்படுகிறது. தலைமுறைகள் கடந்தும் அந்தக் காட்சிக்கான வரவேற்பு குறையவில்லை என்பதே இப்படத்தின் தனிச்சிறப்பு.
இந்நிலையில், 61 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மீண்டும் திரைக்கு வருவதற்குத் தயாராகியுள்ளது ‘திருவிளையாடல்’. லண்டன் மற்றும் ஜெர்மனியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான அக்டோபர் 1ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிவாஜி கணேசனின் பேரனும், சிவாஜி ராம்குமாரின் மகனுமான தர்ஷன், சிவாஜியின் சகோதரர் வி.சி. சண்முகத்தின் மகன் கிரி சண்முகம் உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினர் கலந்துகொண்டனர். மேலும், நடிகர்கள் ஒய்.ஜி. மகேந்திரன், இளவரசு, இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், கதாசிரியரும் இயக்குநருமான பூபதி ராஜா, முனைவர் மருது மோகன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.
ஸ்ரீ பால விநாயகர் பிக்சர்ஸ் சார்பில் ஜி. லதா இப்படத்தை வெளியிடுகிறார். சிவாஜி கணேசனின் தீவிர ரசிகரான பி.வி. முரளி, இப்படத்தின் மறுவெளியீட்டுப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.
காலம் கடந்தும் ரசிகர்களைக் கவரும் சிவாஜியின் நடிப்பையும், ஏ.பி. நாகராஜனின் அற்புதமான இயக்கத்தையும் மீண்டும் பெரிய திரையில் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது. குறிப்பாக, சிவாஜி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘திருவிளையாடல்’ திரைப்படம் நவம்பர் 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Sivaji Ganesan’s Timeless Classic ‘Thiruvilaiyaadal’ Set for Grand Re-Release on November 27 After 61 Years!
One of Tamil cinema’s most celebrated classics, ‘Thiruvilaiyaadal’, starring the legendary Nadigar Thilagam Sivaji Ganesan, is all set to return to theatres after 61 years. The digitally enhanced film will be released worldwide on November 27, bringing the timeless cinematic experience back to the big screen.
Directed by Arutselvar A.P. Nagarajan and featuring music by Isai Thilagam K.V. Mahadevan, ‘Thiruvilaiyaadal’ was originally released in 1965 and went on to become a phenomenal success.
The film featured an impressive ensemble cast, including Sivaji Ganesan, Muthuraman, T.S. Balaiah, Nagesh, A.P. Nagarajan, Savithri and Devika. Known for its powerful performances, memorable dialogues, exceptional music and magnificent storytelling, the film continues to hold a special place in the hearts of Tamil cinema lovers.
One of the film’s most iconic sequences is the legendary exchange between Nagesh, who portrayed Dharumi, and Sivaji Ganesan, who played Lord Shiva. The memorable dialogue sequence remains one of the most celebrated scenes in Tamil cinema and continues to entertain audiences across generations.
After 61 years, this evergreen classic is making its way back to theatres in a digitally enhanced version. The trailer launch event was held in Chennai on October 1, coinciding with the birth anniversary of Nadigar Thilagam Sivaji Ganesan.
The event witnessed the participation of Sivaji Ganesan’s grandson Darshan, son of Sivaji Ramkumar, along with Giri Shanmugam, son of Sivaji’s brother V.C. Shanmugam, and other members of the legendary actor’s family.
Actor Y.G. Mahendran, Ilavarasu, filmmaker and actor Chitra Lakshmanan, writer and director Boopathy Raja, and Dr. Marudhu Mohan were among the prominent personalities who attended the occasion and added grandeur to the event.
The film has undergone digital restoration and enhancement in London and Germany. G. Latha, under the banner of Sri Bala Vinayagar Pictures, will be releasing the film.
The re-release initiative is being coordinated by P.V. Murali, an ardent fan of Sivaji Ganesan, who is working towards bringing this cinematic masterpiece back to audiences worldwide.
With enormous anticipation among Sivaji Ganesan’s fans and classic cinema enthusiasts, ‘Thiruvilaiyaadal’ is set to recreate its magic on the big screen when it arrives in theatres worldwide on November 27.
