Friday, November 13
Shadow

இந்தியத் திரைப்படங்களுக்கு ஐரோப்பாவில் புதிய சந்தை! தனுஷ் – மம்மூட்டி நடிக்கும் ‘ஓம்’ படத்தை விநியோகம் செய்யும் Future Run Up Films!

இந்தியத் திரைப்படங்களுக்கு ஐரோப்பாவில் புதிய சந்தை! தனுஷ் – மம்மூட்டி நடிக்கும் ‘ஓம்’ படத்தை விநியோகம் செய்யும் Future Run Up Films!

ஐரோப்பியத் திரைப்பட விநியோகத் துறையில் புதிய தடம் பதிக்கும் Future Run Up Films – United Films Europa நிறுவனத்துடன் இணைந்து சர்வதேசப் பயணத்தைத் தொடங்குகிறது!

இந்தியத் திரைப்படங்களை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்கும் நோக்கில், Future Run Up Films நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் தனது திரைப்பட விநியோகப் பணிகளை விரிவுபடுத்தியுள்ளது. இதன் ஒரு முக்கிய முன்னெடுப்பாக, United Films Europa நிறுவனத்துடன் இணைந்து புதிய விநியோகக் கூட்டணியை உருவாக்கியுள்ளது.

இந்தக் கூட்டணியின் வாயிலாக தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் திரைப்படங்களை ஐரோப்பியத் திரையரங்குகளில் வெளியிட்டு, அங்குள்ள இந்தியத் திரைப்பட ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய முயற்சியின் முதல் கட்டமாக போலந்து நாட்டில் தனது விநியோகப் பயணத்தைத் தொடங்குகிறது Future Run Up Films நிறுவனம்.

இதன் தொடக்கமாக, நடிகர் தனுஷ் மற்றும் மம்மூட்டி இணைந்து நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘ஓம்’ (OM) திரைப்படம் ஐரோப்பியத் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியத் திரைப்பட ரசிகர்களுக்கு மற்றுமொரு புதிய சர்வதேசத் திரையரங்க அனுபவத்தை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியத் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதுடன், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களின் வர்த்தகத்தையும் சர்வதேச அளவில் விரிவுபடுத்துவதே இந்தக் கூட்டணியின் பிரதான நோக்கமாகும்.

இந்திய சினிமாவின் படைப்புகளையும், அதன் பன்முகத்தன்மையையும் ஐரோப்பிய ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த முயற்சி, Future Run Up Films நிறுவனத்தின் சர்வதேச விநியோகப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியத் திரைப்படங்களின் சர்வதேசப் பயணத்திற்கு புதிய கதவுகளைத் திறக்கும் வகையில் அமைந்துள்ள Future Run Up Films நிறுவனத்தின் இந்த முன்னெடுப்பு திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.

Future Run Up Films to Distribute Dhanush and Mammootty’s ‘OM’ Across Europe

Future Run Up Films expands its footprint in European film distribution through a strategic partnership with United Films Europa, beginning its journey from Poland.

With the vision of taking Indian cinema to a wider international audience, Future Run Up Films is expanding its film distribution operations across European countries. As part of this initiative, the company has joined hands with United Films Europa to establish a new distribution partnership.

Through this collaboration, the companies aim to bring Tamil, Malayalam and Hindi films to audiences across Europe, creating new opportunities for Indian films in the international theatrical market. The distribution journey will begin in Poland as the first phase of this expansion.

As part of the launch initiative, the highly anticipated film ‘OM’, starring Dhanush and Mammootty, is set to release in theatres across Europe. The release marks an important step towards introducing Indian films to a wider European audience and strengthening their international theatrical presence.

The primary objective of this partnership is to create new international markets for Indian films, expand their theatrical reach and introduce the diversity of Indian cinema to audiences across Europe.

This initiative is expected to mark a significant milestone in Future Run Up Films’ international distribution journey, opening up new avenues for Indian cinema in the European theatrical market.