Thursday, November 12
Shadow

இம்ரான் ஹாஷ்மியின் அடுத்த ஹாரர் அதிரடி ‘ரூஹ்’ – இசையும் மர்மமும் கலந்த பிரம்மாண்ட படைப்பாக 2027-ல் திரைக்கு வருகிறது!

இம்ரான் ஹாஷ்மியின் அடுத்த ஹாரர் அதிரடி ‘ரூஹ்’ – இசையும் மர்மமும் கலந்த பிரம்மாண்ட படைப்பாக 2027-ல் திரைக்கு வருகிறது!

இந்தி திரையுலகில் காதல், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் மற்றும் ஹாரர் படங்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகர் இம்ரான் ஹாஷ்மி, தற்போது மீண்டும் ஹாரர் ஜானரில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார். ‘ரூஹ்’ (ROOH) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், ஹாரர் மற்றும் காதல் உணர்வுகளை இசையுடன் இணைத்து உருவாகவுள்ள பிரம்மாண்டமான படைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பில் பாலிவுட்டின் முன்னணி நிறுவனங்களான டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியுடன் கைகோர்த்துள்ளன. டிப்ஸ் நிறுவனத்தின் சார்பில் குமார் தௌரானி, கிரிஷ் குமார் ஆகியோருடன் விக்ட் ஃபிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது. மயங்க் ஷர்மா இப்படத்தை இயக்குகிறார். விஷால் கபூர் மற்றும் மயங்க் ஷர்மா இணைந்து கதையை எழுதியுள்ளனர்.

வழக்கமான ஹாரர் திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு, இசையை மையமாகக் கொண்டு காதல், பிரிவு, ஏக்கம், மர்மம் எனப் பல்வேறு உணர்வுகளை உள்ளடக்கிய கதைக்களத்தில் ‘ரூஹ்’ உருவாகிறது. குறிப்பாக, இசைக்கும் கதைக்கும் இடையிலான தொடர்பு இப்படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

இம்ரான் ஹாஷ்மியின் திரைப்பயணத்தில் இசைக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அவரது படங்களில் இடம்பெற்ற காதல் பாடல்கள் பலவும் ரசிகர்களின் மனதில் இன்றளவும் நீங்கா இடம்பிடித்துள்ளன. இந்த நிலையில், இசையை மையமாகக் கொண்ட ஹாரர் காதல் கதையில் அவர் நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இம்ரான் ஹாஷ்மியின் திரையுலக அறிமுகமான ‘ஃபுட்பாத்’ திரைப்படத்தைத் தயாரித்த குமார் தௌரானி, பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவருடன் இணைந்திருப்பதும் இப்படத்தின் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது.

இந்தக் கூட்டணி குறித்து தயாரிப்பாளர் குமார் தௌரானி கூறுகையில், இம்ரான் ஹாஷ்மியுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சியளிப்பதாகவும், ஏற்கெனவே இருவரும் இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள நிலையில், ‘ரூஹ்’ திரைப்படத்தின் மூலமும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர்கள் சன்னி கன்னா மற்றும் விக்ரம் கக்கர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதும் மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விக்ட் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் விக்ரம் கக்கர் பேசுகையில், டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்களின் கூட்டணி இப்படத்திற்கு மிக முக்கியமான பலமாக அமைந்துள்ளதாகவும், ரசிகர்களுக்கு வித்தியாசமான ஹாரர் திரைப்பட அனுபவத்தை வழங்குவதில் படக்குழு ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சன்னி கன்னாவும், குமார் தௌரானி மற்றும் கிரிஷ் குமார் ஆகியோரின் அனுபவமும், திரைத்துறை மற்றும் இசைத்துறையில் அவர்கள் உருவாக்கியுள்ள தனித்துவமான அடையாளமும் இப்படத்தின் தரத்தை மேலும் உயர்த்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக, இசை முக்கியப் பங்கு வகிக்கும் திரைப்படத்தில் டிப்ஸ் நிறுவனங்களுடன் இணைந்திருப்பது சிறப்பானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து நடிகர் இம்ரான் ஹாஷ்மி கூறுகையில், குமார் தௌரானியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியான தருணம் என்றும், தனது திரைப்படங்களுடன் ரசிகர்கள் உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைவதற்கு இசை எப்போதும் முக்கியக் காரணமாக இருந்து வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். ‘ரூஹ்’ திரைப்படத்தின் கதைக்கு உயிரூட்டும் வகையில் காதல், மர்மம் மற்றும் ஆழமான உணர்வுகள் நிறைந்த இசையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

டிப்ஸ் ஃபிலிம்ஸ் வழங்கும் இப்படத்தை விக்ட் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. குமார் தௌரானி, கிரிஷ் குமார், விக்ரம் கக்கர் மற்றும் சன்னி கன்னா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். விகாஸ் சாஹ்னி இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். படத்தின் இசையை டிப்ஸ் மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள ‘ரூஹ்’, இசையும் காதலும் திகிலும் இணையும் புதிய திரையரங்க அனுபவமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பை இப்போதே உருவாக்கியுள்ளது.

Emraan Hashmi Teams Up with Tips Films and Tips Music for Music-Driven Horror Thriller ‘ROOH’; Film Set for 2027 Release

Bollywood actor Emraan Hashmi, known for his memorable performances in romantic dramas and horror films, is all set to return to the horror genre with an intriguing new project titled ‘ROOH’. Blending horror, romance and music, the film promises to offer audiences a unique and immersive cinematic experience.

Tips Films and Tips Music have joined hands with Emraan Hashmi for this music-driven horror thriller. The film is being produced by Kumar Taurani of Tips Films, along with Girish Kumar, Vikram Kakkar and Sunny Khanna. Directed by Mayank Sharma, the story has been written jointly by Vishal Kapoor and Mayank Sharma.

Unlike conventional horror films, ‘ROOH’ is envisioned as an emotionally engaging narrative that brings together elements of horror, romance, separation, longing and mystery, with music playing a central role in the storytelling.

Music has always been an integral part of Emraan Hashmi’s films, with several of his romantic tracks continuing to enjoy immense popularity among audiences. His return to the horror genre with a film that places music at its heart has already generated curiosity among moviegoers.

Adding to the significance of the project is Emraan Hashmi’s reunion with producer Kumar Taurani. Tips Films had earlier produced Emraan’s debut film, ‘Footpath’, and the two are now coming together once again for ‘ROOH’ after several years.

Speaking about the project, Kumar Taurani said that reuniting with Emraan Hashmi was a special moment, as their association dates back to his debut film ‘Footpath’. Having collaborated on several memorable projects over the years, he expressed confidence that ‘ROOH’ would recreate the magic of their earlier association. He also expressed his excitement about working alongside Sunny Khanna and Vikram Kakkar, adding that the team looks forward to delivering a memorable theatrical experience.

Vikram Kakkar of Vick Films Productions described ‘ROOH’ as a special project and said that joining hands with Tips Films and Tips Music marked an important milestone. He expressed enthusiasm about bringing a grand and unforgettable horror experience to audiences in theatres in 2027.

Producer Sunny Khanna also welcomed the collaboration with Kumar Taurani and Girish Kumar, highlighting their significant contributions to the film and music industries. He said their association would add considerable value to a film in which music plays a crucial role. He further expressed his excitement about taking the film to audiences across Hindi, Tamil and Telugu markets.

Speaking about the musical aspect of the film, Emraan Hashmi said that working with Kumar Taurani once again was a pleasant coincidence. He emphasised that music has always played a significant role in creating an emotional connection between his films and audiences. With ‘ROOH’, the team aims to create a soundtrack that reflects the soul of the film through romance, mystery and deep emotions.

Presented by Tips Films and produced by Vick Films Productions, ‘ROOH’ is directed by Mayank Sharma. Kumar Taurani, Girish Kumar, Vikram Kakkar and Sunny Khanna are jointly producing the film, while Vikas Sahni serves as the co-producer. The screenplay is written by Vishal Kapoor and Mayank Sharma, with Tips Music handling the film’s music.

‘ROOH’ is scheduled for a theatrical release in Hindi, Tamil and Telugu in 2027. With horror, romance and music coming together, the film is poised to offer a distinctive cinematic experience.